மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?
மதுரை: மதுரை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. அதனடிப்படையில் ராம ஸ்ரீனிவாசன் மதுரை தெற்கு தொகுதியை குறி வைத்திருக்கிறார். இருப்பினும் சிட்டிங் எம்எல்ஏ புதூர் பூமிநாதனுக்கு ராம ஸ்ரீனிவாசன் சவால் அளிப்பாரா என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே மதுரை தெற்கு தொகுதியை மையமிட்டு ராம ஸ்ரீனிவாசன் பணியாற்றி வந்தார்.

அதற்கு பின்னணியில் லோக்சபா தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் தான் காரணமாக அமைந்தது. லோக்சபா தேர்தலிலும் பாஜக சார்பாக ராம ஸ்ரீனிவாசன் தான் வேட்பாளர். அப்போது மதுரை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குகளில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு 45,783 வாக்குகள் கிடைத்தது. இதன்பின் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்கு 42,073 வாக்குகள் கிடைத்தது.
அதேபோல் அதிமுக சார்பாக போட்டியிட்ட சரவணனுக்கு 26,810 வாக்குகள் கிடைத்தது. இம்முறை அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளதால், மதுரை தெற்கு தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று ராம ஸ்ரீனிவாசன் காய் நகர்த்தி சீட் பெற்றுள்ளார். திமுக சார்பாக கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்எல்ஏ புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ப்ளஸ்.
புதூர் பூமிநாதனை பொறுத்தவரை தொகுதிக்குள் நல்ல பெயருடன் வலம் வருபவர். தொகுதியில் எந்த நல்லது, கெட்டது என்றாலும் உடனடியாக அந்த இடத்தில் இருப்பார். அதேபோல் மதுரை தெற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு பரீட்சியமான முகம். இன்னொரு பக்கம் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அதிமுக நிர்வாகிகளும் கூட ஆதரவு அளிப்பார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித புகாரும் இல்லை என்பதோடு, தொகுதி உள்ள மருத்துவமனைகளை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது, மண்டல புற்றுநோய் மையம் மேம்பாடு, சாலைப் பணிகள் என்று ஏராளமானவற்றை செய்துள்ளார். இதனால் தொகுதியில் பூமிநாதனுக்கு நல்லப் பெயர் இருக்கிறது. மறுபக்கம் ராம ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை தெலுங்கு ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த பின், இந்த தொகுதியில் உள்ள மண்டபத்தில் பிறந்தநாளினை கொண்டாடினார். அதேபோல் செளராஷ்டிரா சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். செளராஷ்டிரா சமூக மக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால் விஜய் இம்முறை செளராஷ்டிரா சமூக வாக்குகளில் மிகப்பெரிய ஓட்டையை போடுகிறார்.
மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளராக கோபிசன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர் தான். அதேபோல் செளராஷ்டிரா இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ராம ஸ்ரீனிவாசனுக்காக அதிமுகவினர் பணியாற்றுவார்களா என்பதும் கேள்விக்குறி தான்.
அதுமட்டுமல்லாமல் புதூர் பூமிநாதன் கடந்த 5 ஆண்டுகளாகவே மதுரை தெற்கு தொகுதியில் பணியாற்றி வருகிறார். ஆனால் ராம ஸ்ரீனிவாசன் இனி தான் தெற்கு தொகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் வாக்கு சேகரிக்க தொடங்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ராம ஸ்ரீனிவாசன் தொகுதிக்குள் முழுமையாக வலம் வந்து வாக்கு சேகரிப்பதே கஷ்டம் தான்.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்!












Click it and Unblock the Notifications