அப்படி பேசிய ஆளுநர் ரவி.. “நேரத்தை வீணடிக்க விரும்பல” - சிம்பிளாக ‘நோஸ் கட்’ செய்த அமைச்சர் மா.சு!
மதுரை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். இதையேதான் சனாதன தர்மமும் சொல்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.
ஆளுநரின் சனாதன தர்மம் தொடர்பான கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் அவர் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து வருகிறார். திமுக அரசுக்கு முரண்பாடான விஷயங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக் கூறுவதும் பின்னர் அது பெரும் சர்ச்சையாவதும் தொடர்ந்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.

சனாதான தர்மம்
இந்நிலையில், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைதைப் போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக இருக்கும்.

ரிஷிகளாலும் முனிவர்களாலும்
இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்த கஜினி முகமது சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகர், பெஷாவர் நகரங்களை உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க ராணுவத்தால் தகர்க்கப்பட்டது. இதில் இருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை நாம் அறிந்துகொள்ளலாம். இந்த நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. ஒரே பரமேஸ்வரா என்பதையே சனாதன தர்மம் கூறுகிறது" என உரையாற்றினார்.

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநரின் சனாதன தர்மம் தொடர்பான கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், இது குறித்து பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ்
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசைன் தயாரானதும் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2% என்ற அளவில் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications