Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது செம்ம ட்விஸ்ட்.. திமுகவினரை மெர்சலாக்கிய அழகிரி ஆதரவாளர்களின் கருணாநிதி பிறந்த நாள் போஸ்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்மாவட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் திமுகவினரையே அசரவைத்துள்ளது.

கருணாநிதியின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி

கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தென்மாவட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அசத்தலான சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். மு.க.அழகிரி, திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டவர். பெற்ற மகனாக இருந்தாலும் அழகிரியை மரணிக்கும் வரை திமுகவில் மீண்டும் கருணாநிதி சேர்க்கவில்லை.

அழகிரி நிலைப்பாடு

அழகிரி நிலைப்பாடு

கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைய அழகிரி பலவித முயற்சிகளை மேற்கொண்டார். கருணாநிதி குடும்பத்தினர் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனாலும் திமுகவில் அழகிரியின் அத்தியாயம் முடிந்த ஒன்றாகவே இருந்தது. சட்டசபை தேர்தலில் திமுக வென்று, மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்னர் மு.க. அழகிரியின் ஆவேசமும் கோபமும் தணிந்தது.

அழகிரி ஆதரவாளர்கள் தவிப்பு

அழகிரி ஆதரவாளர்கள் தவிப்பு

எப்போதும் திமுகவுக்கு எதிராக அனலை கக்கும் மு.க.அழகிரி இப்போது படுஅமைதியாகிவிட்டார். அழகிரி தரப்பு என ஒன்று இருக்கிறதா? என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. தமது ஆதரவாளர்களிடம் இருந்து மு.க.அழகிரி வெகுவாகவே ஒதுங்கி இருக்கிறார். இதனால் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். உள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் திமுகவில் மு.க. அழகிரி ஆதரவாளர்களை மீண்டும் சேர்க்காமல் கதவை மூடியும் வருகின்றனர். இதுபற்றி அழகிரியிடம் பேசவும் முடியாமல் அவரது ஆதரவாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

செம்ம போஸ்டர்

செம்ம போஸ்டர்

இந்நிலையில் இன்று கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அழகிரி ஆதரவாளர்கள் அடித்த, ஒட்டிய சுவரொட்டிகள் திமுகவினரையே அசரவைத்துள்ளது. ஒரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி, இன்னொரு பக்கம் மு.க.அழகிரி, அவரது மகன் துரைதயாநிதி படம், வழக்கம் போல கருணாநிதிக்கு வாழ்த்து என இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. இதுதான் திமுகவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தென்மாவட்ட திமுகவில் அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்கள் பரபரப்பையும் கிளப்பிவிட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+