மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரோகி இபிஎஸ் விசுவாசி ஓபிஎஸ்..முழுவேகத்துடன் களமிறங்கிய முக்குலத்தோர்! முதல்வருக்கு பறந்த கோரிக்கை!

Google Oneindia Tamil News

மதுரை : ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் புயலாக வீசி வரும் நிலையில், ஜீலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என முக்குலத்தோர் அமைப்பின் சார்பில் ஓபிஎஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது.

அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்கஅடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க

இந்நிலையில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பேசினார்.

ஒற்றைத்தலைமை விவகாரம்

ஒற்றைத்தலைமை விவகாரம்

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக பொதுக்குழுவில் கூடியிருந்த உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து பாதியிலேயே ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியேறிய போது அவர் மீது காகிதங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றது.

ஓபிஎஸ்க்கு ஆதரவு

ஓபிஎஸ்க்கு ஆதரவு

மேலும் ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனம் பஞ்சர் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை பலரும் கண்டித்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குறிப்பிட்ட சமுதாய அமைப்புகளும், அதிமுக தொண்டர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி மறந்த எடப்பாடி

நன்றி மறந்த எடப்பாடி

அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தி, சபை நாகரீகம் தெரியாத நன்றி மறந்த எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி தொடர்ந்து வன்முறை தூண்டுதலுடன் பேசி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓபிஎஸ்சை பொதுக்குழு கூட்டத்தில் தண்ணீர் பாட்டிலை எறிந்தும், வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி கும்பலை வன்மையாக கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு கோரிக்கை

முதல்வருக்கு கோரிக்கை

மேலும் எடப்பாடி ஆதரவாளர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழ கூட்டத்தில் வன்முறையை தூண்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட தி்ட்டமிட்டிருப்பதாலும், கொரோனா பரவும் அபாயகரமான காலகட்டத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
While the single leadership issue is raging in the AIADMK, there has been a stir due to the posters put up in support of OPS by the mukkulathor organization asking the Tamil Nadu Chief Minister to stop the AIADMK Generabody meeting to be held on 11th July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X