முதல்வராக இருந்து 20 ஆண்டுகளாக தேனி முன்னேறவில்லை.. ஓபிஎஸ் பெயரை சொல்லாமல் நிர்மல்குமார் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

தேனி: பெரியகுளத்தில் இருந்து ஒருவர் முதல்வர், துணை முதல்வர் பதவியில் இருந்த போது, இந்தப் பகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பெயர் குறிப்பிடாமல் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசிய விவகாரம் கவனம் பெற்றுள்ளது. அதில் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், விவசாயம் செய்வதற்கு உகந்த மாவட்டம் தேனி. ஆனால் தேவையான ஒத்துழைப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டதில்லை. கல்வி நிறுவனங்கள், கால்நடை வளர்ச்சி, விளையாட்டு வசதிகள் என்று எதுவும் செய்யப்படவில்லை.

OPS

ஆனால் இனி விஜய் தலைமையிலான அரசு சார்பாக தேனிக்கு அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். தேனியில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் சரி செய்யப்பட நடவடிக்கைகள் எடுப்போம். அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை. மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் கூட போதுமானதாக இல்லை. மருத்துவமனைக்கு மட்டும் 2 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

இதுகூட தெரியாமல் முந்தைய ஆட்சியார்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தவெக அரசு அப்படி இல்லை. பேருந்து வசதிகள் இல்லாமல் தேனி பல மாவட்டங்கள் இருக்கிறது. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது போடப்பட்ட சாலைகள் தான் இப்போதும் உள்ளது. பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் பெரியகுளத்தில் இல்லை. 10 கட்டடங்கள் மட்டுமே கூடுதலாக இருக்கிறது.

பெரியகுளத்தில் இருந்து ஒருவர் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் என்று பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். ஆனால் பெரியகுளத்தில் எந்த மாற்றமும் இல்லை. நிச்சயமாக பெரியகுளம் முன்னேற்றத்திற்கு திட்டமிட்டுள்ளோம். 1992ல் எப்படி இருந்ததோ, அப்படியே தான் இப்போதும் இருக்கிறது. கல்லூரிகள், தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடாமல் சிடிஆர் நிர்மல்குமார் விமர்சித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிடிஆர் நிர்மல்குமார் பட்டும் படாமல் விமர்சித்திருப்பதாகவும் சில பேச்சுகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+