திருமாவளவனுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ்.. ஆனாலும் அந்த ஒரு கேள்வியால் திடீர் டென்ஷன்! பரபரத்த மதுரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாமக ஜாதி கட்சி என்றால் விடுதலை சிறுத்தைகள் எந்த கட்சி? மது ஒழிப்பில் பாமக பிஎச்டி முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார். பாமக பற்றி திருமாவளவன் இழிவாக பேசுவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் காட்டமாக கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது என ஆதரவாகவும் பேசினார்.

பாமக மாநில தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளார். இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

anbumani ramadoss thirumavalavan pmk

தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறை எதற்காக உள்ளது? முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா? தெரியாதா?. தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வரும் இடம் சென்னை தான். தமிழகத்திற்கு வரும் பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் தான் வருகின்றன. அந்த இடத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தளம் கொண்டு வருவதனால் பறவைகள் பாதிக்கப்படும்'' என்றார். இந்த வேளையில் ‛‛திருமாவளவன் பாமகவை ஜாதி கட்சி என்கிறாரே'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம். பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் மிகவும் பிற்படுத்த பட்ட சமூகம் என 6 இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக.
சுற்றுச்சூழல், நீர் நிலைகள், கல்வி, மருத்துவம், மது ஒழிப்பு, நேர்மையான ஆட்சிக்காக போராடி வரக்கூடிய கட்சி பாமக.

இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல விசிகவை பற்றி தரகுறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம்,மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும், அடைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம்.ஏனென்றால் இது எங்களின் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார்.

திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார் ஆனால் எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்.மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பாமகவை சேர்ந்த 15,000 பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். பாமக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.

திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கி அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.

ஒருபுறம் திருமாவளவன் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார். மறுபுறம் மது ஆலையின் உரிமையாளர்களுக்கு தேர்தலில் பிரசாரம் செய்கிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதற்காக மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டிஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சென்று வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு திமுக எம்பி களும் தமிழக அரசு கடைகளுக்கு 40 சதவீதம் மதுவை சப்ளை செய்கிறார்கள்.

அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது. அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எனவே திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை'' என கூறினார்.

மேலும் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரியது பற்றி அவர், ‛‛நிர்மலா சீதாராமன் கோவையில் நல்ல எண்ணத்தில் தான் கூட்டத்தை நடத்தினார். தொழில் அதிபர்களின் பிரச்சனை என்ன என்பதை கண்டறிவதற்காக தான் அவர் கோவை வந்தார் ஆனால் அதில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது அது தவிர்த்துக்கப்பட வேண்டியது'' என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+