சட்டுனு கிளைமேட்டே மாறுதே.. அதிமுகவுடன் சேரபோகுதா "அந்த கட்சி".. இதுதான் காரணமா.. கவனிக்கும் திமுக

எடப்பாடி மீதான் செல்போன் பறிப்பு வழக்கு குறித்து பிரேமலதா விஜயகாந்த் கண்டம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட அமமுக பிரமுகரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சிங்கம்புணரி பொன்.மணி பாஸ்கரனின் இல்ல திருமண விழாவிற்கு பங்கேற் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி மதுரைக்கு வந்திருந்தார். இந்நிலையில், அதே நாளில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓபிஎஸ் தரப்பினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறுபுறம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் அமைப்பினரும் ஆர்பாட்டம் நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தும் வழியாக செல்லவில்லையென்றாலும் கூட அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அதாவது விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த எடப்பாடி, விமான நிலைய ஓடுபாதையிலிருந்து முனையத்திற்கு செல்ல பேருந்து வழியாக பயணித்தார். அப்போரு பேருந்தில் இவருடன் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரனும் பயணித்திருக்கிறார். அப்போது அவர் எடப்பாடிக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளார்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

அதாவது, தான் எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்துக்கொண்டிருப்பதாக பேஸ்புக்கில் லைவாக பதிவு செய்த ராஜேஷ்வரன் ஒரு கட்டத்தில் எடப்பாடி ஒழிக என்று முழக்கமிட்டுள்ளார். இதனை எதிர்பார்க்கதா எடப்பாடி பழனிசாமி அதிர்ந்துள்ளார். பின்னர் அவரின் பாதுகாவலர் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஸ்வரன் மீதும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் இப்படி இருக்க, நேற்று எடப்பாடி பழனிசாமி மிது செல்போன் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிருப்தி

அதிருப்தி

இந்த விவகாரம் அதிமுகவினரிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "திமுக அரசுக்கு பழிவாங்கும் நோக்கம் இருந்தால் ஏதேனும் வழக்குகளை பதிவு செய்யலாம். அதைவிட்டுவிட்டு இப்படி செல்போன் பறிப்பு வழக்கையெல்லமா போடுவது? அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைக்கு ஒரு அளவே கிடையாதா?" என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேபோல எடப்பாடி தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் சிலர் என்னை தாக்கினர் என்று ராஜேஸ்வரனும் புகார் அளித்திருக்கிறார். எனவே எடப்பாடி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

கண்டனம்

கண்டனம்

அந்த வரிசையில் தேமுதிகவும் இந்நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பேசி அக்கட்சியின் பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனை சரி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலான எதிர்க்கட்சி தலைவர் மீது திருட்டு வழக்கு போட்டியிருக்கிறார்கள். என்ன கொடுமை இது? முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள்? இந்த அரசு எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம்தான்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கூட்டணிக்கு அடித்தளமா?

கூட்டணிக்கு அடித்தளமா?

கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி என இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து இக்கட்சிக்க தலைமையேற்று தேர்தலை சந்தித்தது தேமுதிக. ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், மற்றொரு புறம் வாக்கு வங்கியும் சரியத் தொடங்கியது. இதனையடுத்து திமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் வந்திருந்து. ஆனால் சமீப நாட்களாக திமுகவுக்கு எதிராக கருத்துக்கள் தேமுதிக தரப்பிலிருந்து அதிகமாக வர தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்த விமர்சனங்கள் அதிமுகவுடனான கூட்டணிக்கு அடித்தளம் அமைக்க பயன்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுந்தது. இப்படி இருக்கையில்தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்குப் பதிவுக்கான கண்டனமும் பார்க்கப்படுகிறது.

லிஸ்ட்

லிஸ்ட்

பிரேமலதாவின் அதிமுக ஆதரவு பேச்சுக்கள் வேறு சில, "கூட்டணி சந்தேகங்களையும்" கிளப்பி விட்டுள்ளது.. நடந்து முடிந்த இடைத்தேர்தலின்போதுகூட, தேமுதிக பிரச்சாரத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மாற்றம் தென்படுவதாக சொல்லப்பட்டது.. வழக்கமாக திமுகவை லிஸ்ட் போட்டு குறை சொல்லும் தேமுதிக, இந்த பிரச்சாரத்தில் அந்த அளவுக்கு திமுகவை விமர்சிக்காமல், அதிமுகவையே பெரும்பாலும் விமர்சித்ததை பலரும் கவனிக்கவே செய்தனர்.. ஈரோடு கிழக்கு தொகுதியின் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது பிரேமலதாவின் பேச்சுக்கள் அதிக முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தின.

 இளமையானவர்

இளமையானவர்

பிரேமலதா பேசும்போது, "இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் தென்னரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுக்கு மேல் பேசுவதற்கு அங்கு எதுவும் கிடையாது. அதிமுக வேட்பாளருக்கு வயதாகிவிட்டது... ஆனால், எங்கள் வேட்பாளரை பாருங்கள்.. அவரை போல இளமையானவர் இல்லை... எடப்பாடி பழனிசாமியை பார்த்து யாராவது நல்லவர் வருகிறார் என்று சொல்வார்களா? ஆனால், கேப்டனை பார்த்து சொல்வார்கள்" என்றெல்லாம் பேசியிருந்தார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த பிரேமலதா, திமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை.. அத்துடன், பாஜவையும் தாக்கி பேசுவதை தவிர்த்திருந்தது ஏன்? என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்தது. அதாவது, விலைவாசி ஏறி விட்டது என்று பொத்தாம்பொதுவாக பிரேமலதா அப்போது குற்றஞ்சாட்டினாரே தவிர, பெட்ரோல், டீசல், கேஸ், உரம், நூல் ஆகியவற்றின் விலை ஏற்றம் என்று எதையுமே வெளிப்படையாக சுட்டிக்காட்டி பேசவும் இல்லை, பாஜக குறித்த பேச்சையும் எடுக்கவும் இல்லை.. எனவே, வரப்போகும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆர்வம் காட்டி வருவதாகவே கருதப்பட்டது.

 மாறும் கூட்டணி

மாறும் கூட்டணி

ஆனால், இந்த கணிப்புகள் எல்லாம், பிரேமலதா தந்துள்ள இந்த பேட்டியின் மூலம் எல்லாமே தகர்ந்துள்ளது.. இத்தனைக்கும் இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு டெபாசிட்டை மட்டுமே வாங்கியிருந்த நிலையில், தேமுதிக திடீரென அதிமுகவுக்கு ஆதரவாக பேச என்ன காரணம் என்ற குழப்பமும் எகிறி வருகிறது.. ஒருவேளை, இந்த ஒரு வருடகாலமாகவே திமுகவை அவ்வளவாக விமர்சிக்காத சூழலில், தேமுதிகவின் மென்மைப்போக்கை திமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லையா? அல்லது தேமுதிகவை தவிர்ப்பதால், பாமக திமுக கூட்டணிக்குள் வரப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+