மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் இதயத்தில் கோவா.. ஹார்ட் சிம்பள் போட்ட பிடிஆர்.. மாஸான ட்வீட் போட்டு வருந்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

மதுரை: தான் எத்தனையோ லட்சம் மைல்களை தாண்டி பல்வேறு நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் சென்றுள்ளதாகவும் ஆனால் மக்கள் தன்னை பெரிதும் விரும்பும் கோவாவுக்கு இதுவரை செல்லாதது வருத்தமாக உள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அமைச்சர்களில் தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காரணம் அவர் பாஜக அரசிடம் முன்வைத்த சுளீர் கேள்விகள்தான்.

 மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்

ஜிஎஸ்டி கவுன்சிலில் கோவா மாநிலத்தை பிடிஆர் அவமதித்ததாகவும் அதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் கேட்டு கொண்டார்.

மாநிலங்கள்

மாநிலங்கள்

இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது குறித்தும் தனது பேச்சு அனைத்து மாநிலங்களுக்குமானதாக இருந்தது குறித்தும் விளக்கம் அளித்த பிடிஆர், யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மேலும் கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாதம்

விவாதம்


இதையடுத்து தனியார் ஆங்கில ஊடகத்துடனான விவாதத்தின் போதும், தடுப்பூசிக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டுமா மாநில அரசு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசுக்கு நிதி எங்கே கிடைக்கும், வானத்தில் இருந்தா கிடைக்கிறது? என பொளேர் பதிலளித்தார்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இதையடுத்து கோவா இளைஞர்களிடையே பிடிஆர் டிரென்டாகி வருகிறார். பிடிஆர் யார் என்பது குறித்து கோவா மக்கள் தேடியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்திகளை சுட்டிக் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உருக்கமான கருத்தை தெரிவித்தார்.

மார்க்கம்

மார்க்கம்

இதுகுறித்து அவர் கூறுகையில் நான் இதுவரை விமானம் மூலமாகவும் சாலை மார்க்கமாகவும் பல லட்சக்கணக்கான மைல்களுக்கு சென்றுள்ளேன். இதுவரை 2 ஆயிரம் விமானங்களில் பயணித்துள்ளேன். சில நேரங்களில் கன்கார்டு விமானத்திலும் (ஒலியை விட வேகமாக செல்லும் விமானம்) பயணம் செய்துள்ளேன்.

6 கண்டங்கள்

6 கண்டங்கள்

அது போல் 6 கண்டங்களில் உள்ள 60 நாடுகள், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இன்று நான் ஒரு உண்மையை புரிந்து கொண்டுள்ளேன். நான் கிட்டதட்ட போதுமான தூரம் பயணம் செய்யவே இல்லை. ஆம், இதுவரை நான் கோவாவுக்கு சென்றதில்லை என கூறி அந்த மக்களுக்கு அன்பையும் , நன்றிகளையும் சமிக்ஞை மூலம் தெரிவித்துள்ளார் பிடிஆர்.

English summary
Minister PTR Palanivel Thiyagarajan tweet about that he had never been to Goa as the people of that state became his fans after GST council meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X