மத்திய அரசை நோக்கி மாநில அரசு கையேந்திதான் ஆக வேண்டும்.. ராதாரவி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய அரசை நோக்கி மாநில அரசு கையேந்திதான் ஆக வேண்டும் என நடிகர் ராதாரவி பேசியுள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக நல்லாட்சி புரிய வேண்டுமானால் மத்திய அரசோடு இணக்கமாக செல்ல வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.

Recommended Video

    மதுரை: மாநில அரசு மத்திய அரசிடம் கையேந்தி தான் ஆகணும்… நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு!

    மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார்.

    இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசியதாவது , திமுகவில் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் கழக மேல்மட்டத்தில் இருப்பவர்கள் நல்லவர்கள், இடையில் இருக்கும் சிலர்தான் சரி இல்லாதவர்கள்.

    யூனியன் தலைவன்

    யூனியன் தலைவன்

    சினிமா துறையில் பல்வேறு யூனியன்கள் உள்ளன அவற்றில் நான் ஒரு யூனியனுக்கு தலைவராக உள்ளேன். என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பழிவாங்கும் படலம் நடக்கிறது.

    உலகில் இதுதான் கேவலம்

    உலகில் இதுதான் கேவலம்

    நான் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். செந்தில் பாலாஜியை கைது செய்வோம் என்று சொன்னீர்கள்.
    தற்போது அவரை அருகில் வைத்துள்ளீர்கள் இதைவிட உலகில் கேவலம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தற்போது 4 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உள்ளனர் அடுத்தபடியாக 2026 ல் தமிழகத்தில் 80 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். நாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டியது இல்லை. எங்களைக் கேட்டுத்தான் ஆட்சி நடக்கும்.

    மாரிதாஸ்

    மாரிதாஸ்

    நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மாரிதாஸ் போன்றவர்கள் பேசி வருகிறார்கள். அவர்களை சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் சிறை சென்று பின்னர் வெளியே வருகின்றனர். மாநில அரசு, மத்திய அரசை நோக்கி கையேந்தி தான் ஆக வேண்டும்.

    அதிமுக டூ பாஜக

    அதிமுக டூ பாஜக

    என்னை சிலர் கேட்பார்கள் திமுகவில் இருந்து அதிமுக , சென்று பாஜக சென்று விட்டீர்களே என கேட்கிறார்கள், நான் கேட்கிறேன் வைகோவை கேளுங்கள், அதே போல கூட்டணியை மாற்றி மாற்றி அமைக்கும் திருமாவளவனை கேளுங்கள் என்பேன். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என திமுகவினர் மற்றும் திருமா, வைகோ போன்றவர்கள் கூறினர்.

    வைகோ

    வைகோ

    வருகிற 12-ஆம் தேதி மதுரை வரும் பிரதமருக்கு வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் கோ பேக் மோடி என பலூன் விட முடியுமா என சவால் விட்டார். ஸ்டாலின் மத்திய அரசை எதிர்க்க கூடாது. எதிர்த்தால் எதுவும் நடக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் நல்லவர் ஆனால் கலைஞரைப் போல் அறிவாளி அல்ல , கலைஞர் கருணாநிதி தற்போது நலமாக இருந்தால் மத்திய அரசில் இடம் பெற்றிருப்பார்.

    தமிழகத்தில் ஆட்சி

    தமிழகத்தில் ஆட்சி

    திராவிட கட்சிகளின் வழியில் சென்று தான் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக நல்லாட்சி புரிய வேண்டுமானால் மத்திய அரசோடு இணைந்து செல்ல வேண்டும் என பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+