Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு செல்லூர் ராஜூ சவால்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன்பு நிறுத்துங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சவால் விடுத்துள்ளார்.

Recommended Video

    முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு செல்லூர் ராஜூ சவால்

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம் தான். தவறு இருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கு மடியில் கணமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் "ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது , ஆய்வுக் கூட்டத்திற்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்

    பழனிவேல் தியாகராஜன் பேட்டி

    பழனிவேல் தியாகராஜன் பேட்டி

    பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல் படுத்தி உள்ளனர்.

    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில்

    மூன்று அமைச்சர்களின் ஊழலும் வருமானம் மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலை மற்றும் ஆற்று மணல்கள் திருடப்பட்டு கருங்கல் போடுவதாக முறைகேடு செய்துள்ளனர்
    நன்றாக இருந்த சாலையைக் கெடுத்து ஊழலுக்காக, வருமானத்திற்காக அமைச்சர்கள் இது போன்ற திட்டங்களை செய்துள்ளனர்.
    இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாக உள்ள திட்டங்களை எவ்வாறு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றோம்

    கண்காணிப்பு அவசியம்

    கண்காணிப்பு அவசியம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்தத்திற்காக கட்டப்பட்டுள்ள வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் அவர்களுக்கு குளியலறை கழிப்பறை உள்ளிட்டவை போதுமான வகையில் அமைப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுபோன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும். இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்

    பிடிஆர் பேட்டி

    பிடிஆர் பேட்டி

    மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒரு பணியில் திறப்பு விழாவிற்கு சென்ற போது அந்த திட்டத்தில் கட்டப்பட்ட தரைதளம் உடைந்து விழுந்தது மக்களுக்கு ஞாபகம் இருக்கும் அதுபோன்ற ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தான் நாங்கள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்/ முதல்வர் தலைமையிலான அரசு மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது கடமையாக கொண்டு செயல்படுகின்றோம் வருமானம் வரக்கூடிய திட்டங்களில் கொஞ்சம் அரசு நிதியும் கொஞ்சம் கொஞ்சம் கடனும் பெற்று செய்தால் அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை அடைக்க உதவியாக இருக்கும். சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் திட்டங்கள் முழுமையாக அரசு நிதியில் இருந்து செய்ய வேண்டும்/ குடிநீர் இணைப்புக்கு பெறப்படும் நிதி அதிகமாக பெறப்படுகின்றது ஆனால் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வரி வசூல் செய்யப்படுவதில்லை பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான வசூல் சற்று தான் வித்தியாசம் உள்ளது அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் நிதியில் கட்டியது- இதுமுற்றிலும் தேவையற்றது. பள்ளிகள் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிப்பறை குளியல்அறை கட்டுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்தலாம் வருவாய் தரக்கூடிய திட்டங்களில் மக்களின் பணத்தை முழுவதும் செலவு செய்யக் கூடாது. வருமானம் வரக்கூடிய திட்டங்களில் அரசு நிதி கொஞ்சமும் மீதமுள்ள நிதி கடன் பெற்று திட்டத்தை நிறைவேற்றினால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வரும் வருவாயைக் கொண்டு அந்த கடனை அடைக்க உதவியாக இருக்கும்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்நிலையில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில் அவர் பேசும் போது, மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் காரணம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்தார்.

    மதுரை நகரம்

    மதுரை நகரம்

    அப்போது செல்லூர் ராஜூ கூறும் போது, "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன்பு நிறுத்துங்கள். பல்லாயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை பொத்தாம் பொதுவாக குறை சொல்ல கூடாது.அதிமுக ஆட்சியில் பல்வேறு பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    வாய் புளித்து பேசாதீங்க

    வாய் புளித்து பேசாதீங்க

    நிதி அமைச்சர் தொகுதியில் தான் கடந்த ஆட்சியில் 75% பணிகள் நடைபெற்று உள்ளன. அவர் இப்படி தவறாக பேசுவதால் மக்கள் தான் அவரை தவறாக நினைப்பார்கள். பெரியார் பேருந்து நிலையம் தவறான திட்டத்தில் கட்டப்பட்டால் உலக வங்கி நிதி கொடுத்து இருப்பார்களா? அந்த திட்டம் குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது, அது குறித்து எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அமைச்சர் பேச கூடாது" என்றார்.

    செல்லூர் பதிலடி

    செல்லூர் பதிலடி

    அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் நடத்தப்பட சோதனை குறித்து பேசியவர், "ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம் தான். தவறு இருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கு மடியில் கணமில்லை, எனவே வழியில் பயமில்லை" இவ்வாறு செல்லூர் ராஜூ பேட்டியின் போது கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+