ஒரு கிலோ கறி வாங்கினால் "அது' இலவசமாம்.. ஆடி மாசம் பிஸியில் சந்திரன்.. திணறும் திருமங்கலம்
ஒரு கிலோ கறி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாம்
மதுரை: தமிழ்நாட்டில் ஆட்டுக்கறி விலையும் அதிகமாக இருக்கு.. பெட்ரோல் விலையும் அதிகமாக இருக்கு.. கறியும் வாங்க முடியாமல், பெட்ரோலும் போட முடியாமல் பெரும்பாலான மக்கள் அவதியில் உள்ளனர்.. அவர்களுக்காகவே ஒரு சூப்பர் அறிவிப்பை மதுரைக்காரர் வெளியிட்டுள்ளார்.
திடுதிப்பென்று பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்று சொல்ல முடியாது.. அது எப்போதுமே விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது..
இதனால் மக்கள் அதிருப்தியிலும் வருத்தத்திலும் உள்ளனர்.. நடக்கபோகும் தமிழ்நாடு பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைய ஏதாவது அறிவிப்பு வருமா என்று மக்கள் ஏங்கி காத்தும் உள்ளனர்.

சிறப்பு சலுகை
இப்படிப்பட்ட சூழலில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவர் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளார்.. அவர் பெயர் சந்திரன்.. வழக்கமாக ஆடி மாதம் என்றாலே, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடைகளில் சிறப்பு சலுகை விற்பனை உண்டு.. இந்த சிறப்பு சலுகைகளை வைத்து, அதிக லாபங்களை கடை முதலாளிகள் ஈட்டுவது வழக்கம்..

வியூகங்கள்
அதேபோல, இதுபோன்ற சலுகைகள் பொதுமக்களுக்கும் பலன் தருகிறது.. அந்த வகையில் மக்களை கவர்வதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியூகங்களை கையில் எடுப்பார்கள்.. ஆனால் திருமங்கலம் சந்திரனோ, தன்னுடைய கறிக்கடையில் சிறப்பு விற்பனையை ஆடி தள்ளுபடியாக அறிவித்துள்ளார்.

இலவசம்
திருமங்கலத்திலேயே கறி கடைவைத்துள்ளார் சந்திரன்.. இங்கு ஆடு, கோழியை தவிர, நாட்டு கோழி, வாத்து, முயல்,வான்கோழி, காடை, கருப்புக் கோழி, கின்னிக் கோழி இப்படி ரகம் ரகமாக கறிகள் கிடைக்கும்... இந்த கடை ஆரம்பித்து 2 வருஷமாகிறது.. 2 வருஷமாகவே சிறப்பு ஆஃபர் தந்து வருகிறார்.. முதன்முதலாக ஆடி ஆஃபரில், 1 கிலோ கறிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என்றார்..

கூட்டம்
இப்போது, ஒரு கிலோ கறி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதுமே மதுரையே பரபரப்பாகிவிட்டது.. ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகி வரும்நிலையில். பலரும் சந்திரன் கடைக்கு கறி வாங்க வரிசை கட்டி வருகிறார்கள்.. ஒருகையில் கறி, இன்னொரு கையில் பெட்ரோலுடன் திரும்பி செல்கிறார்கள்... ஆடி மாசம் முழுக்க சந்திரன் பிஸிதான்..!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications