மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயிலே எங்களுக்காக கட்டியதுதான்.. எங்களுக்கு பயமில்லை .. அமைச்சர் செல்லூர் ராஜூ

Google Oneindia Tamil News

மதுரை: திமுகவினர் எத்தனையோ பொய் வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பினார்கள். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது- எங்களுக்கு பயமில்லை என்று செயல்பட்டோம் என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.

The jail in Madurai was built for us : sellurraju

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: " திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி தேடி வரும். திமுகவில் குடும்ப அரசியல் தான் வரும் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை நாடினால் தான் திமுகவில் பதவி கிடைக்கும் என்று திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை சுற்றி வருகிறார்கள்

கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரப்போகுது... அதிமுகவில் நடப்பது தெரியாமலா போய்விடும் -கே.என்.நேருகத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரப்போகுது... அதிமுகவில் நடப்பது தெரியாமலா போய்விடும் -கே.என்.நேரு

அதிமுகவை ஒழிக்க திமுக பல வேலைகளை செய்தது. என் மீது கூட தி மு க வினர் முன்னர் திமுக ஆட்சியில் பொய் வழக்கு பதிவு செய்து என்னை ஜெயிலில் போட்டனர். ஜெயிலே எங்களுக்கு தான் கட்டியது, எங்களுக்கு ஜெயில் குறித்த பயம் இல்லை. என்று தொடர்ந்து கட்சி பணியினை செய்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கேன்.

The jail in Madurai was built for us : sellurraju

2011 நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவினர் தான் இப்போது நீட் தேர்வை பற்றி பேசி குறை கூறி வருகிறார் ஸ்டாலின். காவிரி, இலங்கை தமிழர் உள்பட தமிழகத்தில் நடந்த மக்கள் விரோத திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தவை தான். அதிமுக ஆட்சியில் தான் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால் திமுகவின் ஜால்ராவாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன. திமுக ஆட்சியில் மதுரையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்தது . எங்கு ரவுடியிசம் இருந்தது என்றார்

English summary
The DMK filed a number of cases and sent us to jail. The jail in Madurai was built for us - we are not afraid. : Cooperatives Minister sellur Raju spoke in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X