பெண் சிசு சுவற்றில் அடித்துக்கொலை.. பெற்றோர்களை தூக்கிய போலீஸ்.. கொன்றது ஏன்?.. பரபர வாக்குமூலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி கௌசல்யா. இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கௌசல்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 21-ம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 26-ம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

மர்ம மரணம்
இதனை தொடர்ந்து வீட்டின் அருகிலேயே பெண் சிசு உடலை பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது..இதில் சந்தேகமடைந்த செவிலியர் தேவி கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன்பின்பு சேடபட்டி கிராம நிர்வாக அலுவலர் முணியாண்டி சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து பெண் சிசு கொலையா? என விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உடலில் காயங்கள்
மேலும் முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்க வந்துள்ளனர் என்பதை அறிந்ததும் பெண் சிசுவின் பெற்றோர்கள் தலைமறைவாகி விட்டனர். மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவகுழுவினர் பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். குழந்தையின் கன்னத்தில் தலையில் காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனைக்குப்பின் முடிவு தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.

பெற்றோர் கைது
இந்த நிலையில் தலைமறைவான குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி, கௌசல்யாவை சேடபட்டி போலிசார் பேரையூரில் அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.அப்போது அவர்கள் பெண் சிசுவை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பெண் சிசுவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து முத்துபாண்டி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கொலை செய்தது ஏன்?
குடும்பம் வறுமையில் உள்ள நிலையில் 3-வது பெண்குழுந்தை பிறந்ததால் தனக்கும் கௌயசல்யாவிற்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரத்தில் பெண்சிசுவை சுவற்றில் அடித்து கொலை செய்ததாகவும் முத்துபாண்டி கூறியுள்ளார். .இதில் முத்துப்பாண்டி முதல் குற்றவாளியாகவும் கௌசல்யா 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது இபிசி செக்ஷன் 318 மீது வழக்குப்பதிவு (கொலை செய்து தடயத்தை மறைத்தல்) செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications