மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக-வை அழிக்க நினைக்கும் டிடிவி-யால் திமுக-விற்கே ஆதாயம்.. ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மதுரை: அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் செயல்பட்டது, திமுக வெற்றி பெறவே உதவியுள்ளதாக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அது தான் இந்த இடைத்தேர்தல்களில் எதிரொலித்துள்ளது.

TTV Dinakarans performance helped tp DMK success.. Rajan Chellappa frustrated

அதிமுக அரசு நீடிப்பதற்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மே 23-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு எப்போதும் ஏற்பட போவதில்லை என்றார்.

2 ஆண்டுகளுக்குபிறகும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும். திமுகவில் வெற்றி பெற்ற எம்.பி-க்களால் மக்களுக்கு நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் படுதோல்விடையந்துள்ள டிடிவி தினகரனின் கட்சியிலிருந்து, பலர் இனி அதிமுகவிற்கு திரும்ப வருவார்கள் என குறிப்பிட்டார்.

அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... !! அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... !!

மேலும் பேசிய அவர் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளதாக கூறினார். மதுரை மக்களவை தொகுதியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் அதிமுகவிற்கு வெற்றி கிடைத்திருக்கும். அதிமுகவை பலப்படுத்த வேண்டிய நேரமிது என்பதை தேர்தல் முடிவுகள் எங்களுக்கு உணர்த்தியுள்ளன.

புதுக்கட்சி ன்றாலே அதன் மீது மக்களின் எதிர்பாாப்பு அதிகமாக இருக்கும். அந்த அடிப்படையில் தான் மக்களவை தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு லட்சக்கணக்கில் வாக்குகள் கிடைத்துள்ளது என்றார். மதுரை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற சி.பி.எம் வேட்பாளர் வெங்கடேசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் பேசினார்

English summary
TTV Dinakaran's intention to destroy the AIADMK has accused MLA Rajan Chellappa of helping DMK win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X