ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.. மதுரை தவெக மாநாட்டில் திமுகவை விட்டு விளாசிய விஜய்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய் தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பேசினார். ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் என்று பேசிய விஜய், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்.. அவங்க பாதுகாப்பு என்ன ஆச்சு அங்கிள்' என விமர்சித்தார். கபட நாடகம் ஆடும் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்புவோம்.. என்றும் விஜய் பேசினார்.

மதுரை தவெக மாநாட்டில் இன்று பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் பேசியதாவது:-

இப்போது ஆட்சியில் இருக்கின்ற வெற்று விளம்பர மாடல் ஆட்சி என்ன செய்கிறது என்று தெரியுமா.. பாஜகவோடு உள்ளுக்குள்ள ஒரு உறவை வைத்துக்கொண்டு, வெளியே எதிர்க்கிற மாதிரி ஒரு டிராமா பண்ணிட்டு இருக்காங்க.. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் காட்டுவார்கள்.. ஆளுங்கட்சியாக இருந்தால் வாங்க மோடி என்று குடைபிடித்து கும்பிடு போடுவது..

tvk-madurai-manadu-stalin-uncle-its-very-wrong-uncle-vijay-slams

இட்ஸ் வெரி ராங் அங்கிள்

இது மட்டுமா.. ரெய்டுன்னு ஒன்னு வந்துட்டா போதும்.. இதுவரை ஒரு முறை கூட போகாத ஒரு கூட்டத்துக்கு.. அத காரணம் காட்டி டெல்லிக்கு போகுறது.. அங்க சீக்ரெட் மீட்டிங் நடத்துறது.. நல்லா நோட் பண்ணனும் மக்களே.. அதுக்கு அப்புறம் அந்த இஸ்யூ அப்படியே மறைந்து போயிருக்குமே.. ம்.. ஆமா.. அதே தான்.. "ஸ்டாலின் அங்கிள்.. வாட்ஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.."

இப்படி தமிழ்நாட்டில் நடக்கிற ஒரு ஆட்சியை பாத்துக்குட்டு எப்படி சும்மா இருக்க முடியும்?.. ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்.. அவர் கபட நாடக மு.க ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும்.. "அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்துச்சுன்னா.. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கா.. நியாயம் இருக்கா.. ஊழல் இல்லாமல் இருக்கா.. சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. சொல்லுங்க மை டியர் அங்கிள்..

வெரி வெரி ராங் அங்கிள்

டாஸ்மாக்கில் மட்டுமே ரூ.1,000 கோடி ஊழல் என்று சொல்றாங்க.. அதில மட்டுமா தப்பு நடக்குது.. வேற எதுல தான் நடக்கல.. உலகத்திலேயே மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட்ஸ்ன்னு உங்களுக்கும், உங்க கூட இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் அங்கிள் கொடுக்கனும்.. இத பாத்து வாயே இல்லா ஊரு கூட வயிறு வலிக்க சிரிக்கிறது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்.. வீட்டில் இருந்து வேலை போறவங்க.. கல்லூரிக்கு போறவங்க..

பள்ளிக்கு போறவங்க என எல்லாரும் எங்களுக்கு பாதுகாப்பே இல்ல என்று ஒட்டுமொத்த பெண்களும் கதறுகிறார்கள். அந்த கதறல் சத்தம் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா அங்கிள்.. அதுல வேற உங்கள அப்பான்னு கூப்பிட்றாங்கன்னு சொல்றாங்கன்னு சொல்றீங்க.. வாட் இஸ் திஸ் அங்கிள்.. இட் இஸ் வெரி வெரி ராங் அங்கிள்..

சத்தம் கேட்குதா அங்கிள்

பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதிகள் கொடுத்தீங்க.. போதைப்பொருள் புழக்கத்தை குறைப்பேன் என்று சொன்னீங்க.. செய்தீர்களா.. எல்லாம் பொய் வாக்குறுதிகள்.. அய்யய்யோ.. ரொம்ப வெரி ராங் அங்கிள்.. எப்படி கேட்டாலும் பதில் சொல்லமாட்டாங்க.. பதில் இருந்தால் தானே சொல்லுவாங்க.. மக்களே நீங்க உண்மைய சொல்லுங்க.. வாக்குறுதிகள் கொடுத்தாங்களே சொன்னாங்களே செய்தார்களா... சத்தம்மா.. சொல்லுங்க.. (இல்லை.. இல்லை என தொண்டர்கள் முழக்கமிட்டனர்) மை டியர் அங்கிள்.. சத்தம் கேக்குதா.. இங்க பேசுற மக்களோட சத்தம் கேட்குதா..

இந்த முழக்கம் உங்களை தூங்க விடாது

இது வெறும் சாதாரண முழுக்கம் என்று நினைத்து விடாதீர்கள். இன்று இங்கே கேட்கும் முழக்கம் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் கேட்கும். அப்போது இந்த முழக்கம் இடி முழக்கமாக இருக்கும். நான் மக்களை சந்திக்க போறப்போ அவர்களோடு உணர்வுப் பூர்வமாக பேசுகின்றபோது இந்த முழக்கம் போர் முழக்கமாக மாறும்.. அந்த சத்தம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது.. அது நடக்கிறதா பாருங்க..

எல்லாரும் கட்சி ஆரம்பித்த பிறகு தான் ஒவ்வொரு வீட்டுக்கும் போகல.. நாங்க எல்லார் வீட்டுக்குள்ளேயும் போன பிறகு தான் கட்சியையே ஆரம்பிச்சுருக்கேன்.. எனவே, எல்லாருமா சேர்ந்து கபட நாடகம் ஆடும் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்புவோம்.. இவ்வாறு விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+