அப்ப அவரு பிறக்கவேயில்ல.. மிட்டாய்க்காக ஓபிஎஸ் பக்கம் போனேனா? - போட்டுத்தாக்கிய எம்எல்ஏ அய்யப்பன்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தான் அதிமுக இணைந்து எம்ஜிஆருடன் பணியாற்றியபோது பிறக்கவே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் தெரிவித்து உள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன், "விவசாய பணிகளுக்காக வைகை அணையிலிருந்து 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க மனு அளித்தேன்.

பிறக்கவேயில்லை
58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும். நான் 8 வயதிலிருந்து எம்.ஜி.ஆர் உடன் அதிமுகவில் பணியாற்றி வருகிறேன், மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் சிறுபிள்ளை அல்ல. நான் இரட்டை இலையுடன் கட்சி பணியாற்றி பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை.

சிறுபிள்ளைத்தனம்
சிறுபிள்ளைத்தனமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். அதிமுக ஒன்றினைய ஒ.பி.எஸ் கட்டளைப் படி நாங்கள் யாரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம், எதிர் வரும் தேர்தல்களில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது

அணி தாவிய அய்யப்பன்
இதனை தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவை தெரிவித்தார். ஏற்கனவே அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள் பலம் 4 ஆக அதிகரித்தது. ஆனால் எடப்பாடி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications