எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போ எப்படி இருக்கு? முதல் முறையாக எடப்பாடியை சீண்டிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: இதுவரை அதிமுகவை வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்து வந்த விஜய், இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் அதிமுகவை விமர்சித்துள்ளார். "எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது? நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?" எனப் பேசியுள்ளார் விஜய்.

மதுரையில் இன்று நடைபெற்ற தவெகவின் 2ஆவது மாநில மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக என மீண்டும் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். தவெகவுக்கும் திமுகவுக்கும் எதிராகத்தான் போட்டி எனத் தெரிவித்தார்.

Vijay Breaks Silence on AIADMK How Is AIADMK Now at TVK Conference

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் விஜய். ஆனால் அதிமுக-வை விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்தச் சூழலில் இன்று மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுக கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜய். "மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.. நாம் உலக மகா ஊழல் கட்சியா என்ன? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்குங்க?" என்றார்.

மேலும், "நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.
ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து கொண்டு, மறுபக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என ஏமாற்றிக் கொண்டு இருப்பதுபோல் நம்ம கூட்டணி இருக்காது.

"எதிர்காலம் வரும். என் கடமை வரும். இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்"..
எம்ஜிஆர் யார் தெரியும்ல... அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல... அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல... கனவு கூட காண முடியல.. எப்படியாவது முதலமைச்சர் பதவியை என்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர்.

ஆனால் இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன? அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது" எனப் பேசி உள்ளார் விஜய்.

முன்னதாக மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜூனாவும், அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சித்தார். பின்புற வாசல் வழியாக பாஜவை அதிமுக அழைத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+