நேற்று முளைத்த காளான்.. விஜய்யை அப்படி சொல்வேனா.. பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த விளக்கம்!
மதுரை: நேற்று முளைத்த காளான் என்று தவெக தலைவர் விஜய்ய விமர்சிக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், விஜய்க்கு எப்போதும் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி.. இல்லம் நாடி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் 3ஆம் கட்டமாக மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, நேற்று சிவகங்கையில் மக்களை சந்தித்தார்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், நேற்று முளைத்த காளான் எல்லாம் இங்க எடுபடாது என்று ஆவேசமாக தெரிவித்தார். அதேபோல் தேமுதிக மாநாட்டிற்கு மக்களை அழைக்க எழுதப்பட்ட கடிதத்திலும், நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இதனால் விஜய்யை காளான் என்றும், அதிமுகவை நன்றி மறந்து துரோகம் செய்தவர்கள் என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சிப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சிற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், நான் விஜய்யை நேற்று முளைத்த காளான் என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை.
விஜயகாந்தும், எஸ்ஏசியும் 17 படங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கி பேசுவதில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும். கரூர் பிரச்சாரத்திலேயே 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் விஜய் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல் அதிமுகவையும் துரோகம் செய்தவர்கள் என்று விமர்சிக்கவில்லை. ராஜ்ய சபா சீட் கொடுப்பதால், அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட முடியாது. திமுக ஆட்சியை பொறுத்தவரை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளுக்கு 50 மார்க் கொடுக்கலாம். இன்னும் மீதம் ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!












Click it and Unblock the Notifications