விஜய் கேரவனுக்கு நேரமே சரியில்லை போங்க! கொடைக்கானலிலும் வாகனத்தின் பேனட்டை உடைத்த ரசிகர்கள்
மதுரை: ஜனநாயகன் பட ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் சென்ற விஜய்யின் கேரவனை ரசிகர்கள் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவியது. முழு நேர அரசியலில் தீவிரமாக இறங்கவுள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை விஜய் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்கிறேன். நான் எனது வேலையைப் பார்க்கப் போகிறேன். அங்கு யாரும் எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். அதைப் பார்ப்பதற்கு மிகவும் பதற்றமாக உள்ளது. பத்திரமாக வீட்டிற்கு திரும்பிவிடுங்கள். கூடிய விரைவில் கட்சி சார்பில் மதுரை மண்ணுக்கு வருவேன். இவ்வாறு தெரிவித்தார்.

மதுரை வந்த விஜய்
இந்த நிலையில் விஜய் மதுரை வருவதை அறிந்த ரசிகர்கள், பலர் அவரை தேடிக் கொண்டு மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். அது போல் அவர் அங்கிருந்து திண்டுக்கல் வந்து கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
விஜய்
விஜய் தன் பின்னால் தொடர வேண்டாம் என அறிவுறுத்தியும் பலர் அவரது கேரவன் வாகனத்தை பின்தொடர்ந்தனர். அப்போது வழிநெடுகிலும் கூட்ட நெரிசல் காரணமாக விஜய்யின் வாகனத்தில் சிலர் ஏற முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
கூட்ட நெரிசல்
தொண்டர்களின் கூட்ட நெரிசலில் விஜய்யின் கேரவனின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. அதாவது முன்பகுதியின் பேனட் உடைந்துவிட்டது. ஏற்கெனவே கடந்த வாரம் கோவைக்கு பூத் ஏஜென்ட் கருத்தரங்கிற்கு விஜய் வருகை தந்தார்.
கோவை விமான நிலையம்
அப்போது அவரை காண கோவை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்தனர். அங்கு விஜய்யை பார்க்க அவரது கேரவன் மீது ஏறியதால் பரபரப்பு நிகழ்ந்தது. மேலும் அவரது கேரவனின் கதவு கையோடு கழன்று வந்துவிட்டது. இதையடுத்து அந்த கேரவனை சரி செய்ய கொடுத்துவிட்டு விஜய் வேறொரு காரில் கருத்தரங்கிற்கு புறப்பட்டார்.
அரசியல் கட்சி
விஜய் கடந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாநில மாநாட்டை நடத்தியிருந்தார். அப்போது மத்திய, மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை சந்தித்து மாநில அரசை கண்டித்தார்.
பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்த நிலையில் அவர் தவெக பொதுக் குழுவில் கலந்து கொண்டு திமுகவை விமர்சித்திருந்தார். இதையடுத்து கோவை வந்த அவர் அங்கு தனது பேச்சை குறுகிய நேரத்தில் நடத்தி முடித்தார்.
ஜனநாயகன் விஜய்
விஜய் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வரும் போதிலும் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி படம் என அறிவித்துவிட்டார்.
கொடைக்கானலில் ஷூட்டிங் இல்லை
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாது என கருதிய படக்குழு, கீழ் மலைப் பகுதியான தாண்டிக் குடியில் படப்பிடிப்பை தொடங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படம் அரசியல் படமாகவே இருக்கும் என தெரிகிறது. மேலும் விஜய், சாட்டையோடு இருக்கும் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications