அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்... ஆட்சி அமைப்போம் - டிடிவி தினகரன்
அதிமுகவை மீட்டு சசிகலாவை மீண்டும் பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும் ஆட்சி அமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவை மீட்டு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக தற்போது எதிர்கட்சியாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா. டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளர் ஆனார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். கட்சியில் இருந்து சில எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்றார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக கட்சி, கொடி, சின்னம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக கொடி, சின்னம் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார் டிடிவி தினகரன்.
அதிமுகவில் இருந்து பிரிந்த சென்ற ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் கரம் கோர்த்தார். இதனையடுத்து அதிமுக மீண்டும் ஒன்றானது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமைப் பொறுப்பை கைப்பற்றினர்.

சசிகலா கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுக பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி தினகரனை பொதுச்செயலாளராக, துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்தது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதலே அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும் சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் கூறி வருகிறார் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தினம் ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்து வருகிறார்.

பொதுக்குழுவில் தீர்மானம்
இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், அதிமுகவை எப்போது கைப்பற்றுவீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிடிவி தினகரன், கைப்பற்றுவது என்றால் யானைப்படை, குதிரைப்படைகளைக் கொண்டு போய் கைப்பற்றுவது கிடையாது ஜனாநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் கட்சியை மீட்போம் என்றார்.

கட்சியை மீட்போம்
அமமுகவில் கட்சி நிர்வாகிகளை நீக்கியது ஏன் என்று விளக்கம் அளித்தார். முசிறியில் இரண்டு நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியது ஏன் என்றும் கூறினார். சசிகலாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அமமுக என்ற இயக்கம் கட்சியை மீட்டெடுக்கத்தான் உருவாக்கப்பட்டது.
Recommended Video

சசிகலாவிற்கும் டிடிவி தினகரனுக்கும் மோதல்
விரைவில் அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்குவோம். சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலாவிற்கும் டிடிவி தினகரனுக்கும் மோதல் நீடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது செய்தியாளர்களின் கற்பனை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications