பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கலாய்த்த செல்லூர் ராஜூ.. அதிரடி பேட்டி
மதுரை: வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை வெடி குண்டு என நினைத்து வெளியிட்டார்கள். ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க மதுரை மண்டலத்திற்கான மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான வேட்புமனு தாக்கல் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் துவங்கியது.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு, மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றும் செய்யமுடியவில்லை
இதில் கலந்தது கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அதிமுகவில் பதவி, பணம் சம்பாதித்தவர்களே தற்போது திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேஷ்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள்
அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை

வெடிகுண்டு
நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை வெடி குண்டு என நினைத்து வெளியிட்டார்கள் ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது. 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும்" இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்

பொருளாதாரம் தெரியவில்லை
பின்னர் பேசிய முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியவில்லை. வரவு செலவு, லாபம் நஷ்டத்தை பற்றியே பேசி வரும் நிதி அமைச்சர் சமூக சேவை குறித்தும் சிந்திக்க வேண்டும்
வெள்ளை அறிக்கையில் ஒரு உள் அறிக்கை உள்ளது

சேவைத் துறை
2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, கலர் டி.விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை. வெள்ளை அறிக்கையின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது. சேவைத் துறையின் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என கூற முடியும்

கடன் சுமை
அரசின் செயலாளரை அருகில் வைத்து கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் அறிக்கைக்கு தான் பொறுப்பு என ஏன் கூற வேண்டும் . நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு அரசின் சார்பில் பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கான திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தியுள்ளதால் கடன் சுமை கூடியுள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை அதிமுக 10 ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளது
அரசின் மீது கடன் சுமை இல்லை என்றால் மக்கள் மீது கடன் சுமை கூடியிருக்கும் . மக்களை திசை திருப்ப வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கையாக உள்ளது" இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications