மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகையில் தெர்மாகோலை மிதக்கவிட்டது ஏன்? இதுதான் காரணம்.. மனம்திறந்த செல்லூர் ராஜு!

வைகையில் தெர்மாகோலை மிதக்கவிட்டது ஏன் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: வைகையில் தெர்மாகோலை மிதக்கவிட்டது ஏன் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

வைகை நதி அதிகமாக ஆவியாகி வீணாகிறது என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த ஆவியாதலை தடுப்பதற்காக அதன் மீது தெர்மாகோல்களை தமிழக அரசு மிதக்க விட்டது. 2017ல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

Why I float Thermocol in Vaigai river? Sellur K. Raju explains the reason

தமிழக அரசு கொண்டு வந்த மிக மோசமான காமெடி திட்டம் இதுதான். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூதான் இதை பொறுப்பாக செயல்படுத்தி இணையம் முழுக்க வைரலானார். நீர் ஆவியாவதை தடுக்க உலகம் முழுக்க நிறைய வழிகள் இருக்கிறது.

குஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள!குஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள!

ஆனால் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோலை பயன்படுத்தியது ஏன் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. இதற்கு தற்போது செல்லூர் ராஜூவே விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தெர்மாகோல் திட்டம் தோல்வி அடைந்தது உண்மைதான். அதன் மூலம் நீர் ஆவியாவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சில தவறுகள் அதில் நிகழ்ந்துவிட்டது.

தெர்மாகோல் திட்டம் பொறியாளர் செய்த தவறினால் தோல்வியடைந்தது. எங்கள் திட்டமே வேறு. அது சரியாக நடந்து இருந்தால் இத்திட்டம் வெற்றிபெற்று இருக்கிறது.

வெளிநாடுகளில் ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி நீரை ஆவியாகாமல் தடுக்கும் முறை செயல்பாட்டில் உள்ளது. அது வெற்றிகரமான திட்டம். ஆனால் அதை இங்கே செய்ய நிதி இல்லை.

அதனால் நாங்கள் தெர்மாகோலை பயன்படுத்த திட்டமிட்டோம். அது தோல்வி அடைந்துவிட்டது. ஆனாலும் அதற்கு பின் என்னை ஒரு விஞ்ஞானியாக சித்தரித்து கிண்டல் செய்தது எல்லாம் ஜாலியாகத்தான் இருந்தது என்று கூறியுள்ளார்.

English summary
Why I float Thermocol in Vaigai river? Sellur K. Raju explains the reason after 2 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X