கொரோனா மூன்றாவது அலையால் பாதிப்பு பெரிசா இருக்காது.. மும்பைக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஆய்வு முடிவு!
மும்பை: கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலை ஏற்பட்டாலும், மும்பையில் அதன் பாதிப்பு குறைவாகத்தான் இருக்குமாம். இதற்கு காரணம், மந்தை எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதுதான்.
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம், 80 சதவீத மும்பை மக்கள் ஏற்கனவே வைரசுக்கு எக்ஸ்போஸ் ஆகிவிட்டனர்.

முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்கள் உஷார்
இந்த ஆய்வு அமைப்பின், தொழில்நுட்ப மற்றும் கணினி அறிவியல் பள்ளியின் டீன் டாக்டர் சந்தீப் ஜுன்ஜா கூறுகையில், "இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி, ஏறக்குறைய 17 மாதங்கள் ஆகிவிட்டது. 2020ம் ஆண்டில் முதல் அலை ஏற்பட்டது. அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தற்போது ஆன்டிபாடி அளவு குறைந்திருக்கும் என்பதால், அவர்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடும். " என்றார்.

நகரங்களில் 20 சதவீதம் தடுப்பூசி போதும்
அதேநேரம், கொரோனாவால் இதுவரை பாதிக்கப்படாத நகரவாசிகளில் 20 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி போடப்பட்டால், அது மீண்டும் தொற்றுநோய் பரவுவதை தடுக்க உதவும், ஏனென்றால், மற்றவர்கள் ஏற்கனவே வைரசால் ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பார்கள், என்று டாக்டர் ஜுன்ஜா கூறினார்.

இரண்டாவது அலையில் உச்சம் குறைவு
இரண்டாவது அலையின்போது மும்பை நகரில் ஒரு நாளில் அதிகபட்சமாக 11,202 கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியிருந்தன. ஆனால், டெல்லியில், 28 ஆயிரம், பெங்களூரில் 25 ஆயிரம் கேஸ்கள் பதிவாகியிருந்தன.

மூன்றாவது அலையால் பாதிப்பு இல்லை
முதல் அலையின்போது, பெங்களூர் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் மும்பை அதிகம் பாதிக்கப்பட்டது. எனவேதான், இரண்டாவது அலையில் மும்பை அதிகம் பாதிக்கப்படவில்லை. இப்போது மும்பையில் 80 சதவீதம் மக்கள், நேரடியாக அல்லது, கான்டாக்ட்கள் மூலம் வைரசுடன் தொடர்பை சந்தித்தவர்கள். எனவே மூன்றாவது அலையின்போது மும்பையில் பெரிய பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications