மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'Y' பிரிவு பத்தாது.. 'Z+' செக்யூரிட்டி வேணும் - 'சீரம்' நிறுவனத்தின் ஆதர் பூனவல்லா மனு

Google Oneindia Tamil News

மும்பை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும், குடும்பத்துக்கும் Z+ பாதுகாப்பு தேவை என்று சீரம் நிறுவனத்தின் ஆதர் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா 2ம் அலை பேரழிவு ஏற்படுத்தி வருகிறது. உலகத்தில் வேறு எந்த நாடும் இவ்வளவு மோசமான பாதிப்பை சந்திக்கவில்லை. வைரஸ் பரவத் தொடங்கிய சீனா இப்போது நலமுடன் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த இந்திய தேசமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண் காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண்

ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெமிடிசிவிர் மருந்து பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை என்று பல மாநிலங்கள் திண்டாடி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் கடுமையாக நிலவுகிறது.

 பெரும்பாலான மாநிலங்கள்

பெரும்பாலான மாநிலங்கள்

நாடு முழுவதும் 18-44 வயதினருக்கு மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், 18-44 வயதினருக்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.

 கடும் அழுத்தம்

கடும் அழுத்தம்

இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பலமடங்கு அதிகரித்து வருவதால், அதன் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா தெரிவித்திருந்தார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்கு செல்ல அவர் முடிவெடுத்ததற்கு, அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

 ஏற்கனவே 'ஒய்' பாதுகாப்பு

ஏற்கனவே 'ஒய்' பாதுகாப்பு

இந்த சூழலில், ஆதர் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும், குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவரின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

 ஜுலை முதல்

ஜுலை முதல்


முன்னதாக தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஆதர் பூனவல்லா, "இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Adar Poonawalla seeking Z+ security - கொரோனா தடுப்பூசி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X