Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தானில் மட்டுமில்லை.. மகாராஷ்டிராவிலும்.. நுபுர் சர்மாவிற்கு ஆதரவளித்தவர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

மும்பை: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையா லால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதே விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India

    பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மே மாத இறுதியில் தெலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இது சில இடங்களில் வன்முறையானது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இருப்பினும் இந்த பிரச்சனை முடிந்ததாக இல்லை. தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த 28 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் தெருவில் வசித்து வந்த டெய்லர் கண்ணையா லால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 2 பேர் வீடியோ வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கண்ணையாலால் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட நிலையில் தான் கொலை நடந்தது தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் கைதான 2 பேரிடமும் என்ஐஏ விசாரணை நடத்த உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் இன்னொரு சம்பவம்

    மகாராஷ்டிராவில் இன்னொரு சம்பவம்

    கண்ணையா லால் படுகொலையின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தான் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவரம் வெளியாகி உள்ளது. அதுபற்றி விபரம் வருமாறு:

    மெடிக்கல் கடை உரிமையாளர்

    மெடிக்கல் கடை உரிமையாளர்

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவாதி மாவட்டம் கோத்வாளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ் பிரஹலாத்ராவ் (வயது 54). இவர் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவருக்கு சங்கீத் (வயது 27) என்ற மகன் உள்ளார். சங்கீத்தின் மனைவி பெயர் வைஷ்ணவி. இந்நிலையில் ஜூன் 21 இரவில் மெடிக்கல் கடையை அடைத்த உமேஷ் பிரஹலாத்ராவ் இரவு 10.30 மணியளவில் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து மகன் சங்கீத் தனது மனைவி வைஷ்ணவியுடன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

    வழிமறித்து கத்திக்குத்து

    வழிமறித்து கத்திக்குத்து

    கடையில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் உமேஷ் பிரஹலாத்ராவின் டூவீலரை தடுத்து நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய நபர் கத்தியை எடுத்து உமேஷ் பிரஹலாத்ராவின் கழுத்தில் குத்தினார். இதனால் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து வேகமாக சென்றனர்.

    மருத்துவமனையில் பலி

    மருத்துவமனையில் பலி

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கீத் உதவி கோரினார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தந்தை உமேஷ் பிரஹலாத்ராவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    5 பேர் கைது

    5 பேர் கைது

    இதுகுறித்து சங்கீத் சார்பில் கோத்வாளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உமேஷ் பிரஹலாத்ராவ் கொலை தொடர்பாக ஜூன் 25ல் முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின்படி ஜூன் 25ல் அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஷமீம் அகமது பெரோஸ் அகமது என்பவர் தலைமறைவாக உள்ளார். இவரை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    கொலை நடந்தது எப்படி?

    கொலை நடந்தது எப்படி?

    இந்நிலையில் கைதான 5 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ‛‛கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவர் தான் கொலையாளிகளுக்கு ஒவ்வொரு பணிகளையும் பிரித்து கொடுத்துள்ளார். கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 2 பேர் உமேஷ் பிரஹலாத்ராவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். உமேஷ் பிரஹலாத்ராவ் மெடிக்கல் கடையில் இருந்து புறப்பட்டது பற்றி இவர்கள் 2 பேரும் தகவல் கொடுத்த நிலையில் மற்ற 3 பேரும் கொலை செய்துள்ளனர்'' என்றனர்.

    கொலைக்கான காரணம் என்ன?

    கொலைக்கான காரணம் என்ன?

    மேலும், "நுபுர் சர்மாவை ஆதரித்து உமேஷ் பிரஹலாத்ராவ் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தவறுதலாக இதுதொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்தார். அந்த குழுவில் அவரது வாடிக்கையாளர்களாக இருந்த முஸ்லிம்கள் சிலரும் இருந்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் கூறும்போது, ‛‛இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தை அவர் அவமதித்துள்ளார். இதனால் அவர் கண்டிப்பாக இறக்க வேண்டும்' என விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    கத்தி, கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    கத்தி, கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    மேலும் கைதான 5 பேரிடம் இருந்து கத்தி, செல்போன், கொலைக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைதான நபர்களின் வங்கி கணக்கு விபரங்கள், அவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    மகன் கூறுவது என்ன?

    மகன் கூறுவது என்ன?

    இதுபற்றி கொலையான உமேஷ் பிரஹலாத்ராவின் மகன் சங்கீத்திடம் கொலைக்கு சமூக வலைதள பதிவு காரணமாக இருக்க முடியுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "எனது தந்தை மிகவும் நல்ல நபர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கூடியவர். யாரை பற்றியும் தவறாக பேசியதில்லை. எந்த அரசியல் கட்சியிலும் தொடர்பு கொண்டவர் இல்லை. அவரது சமூக வலைதள பதிவு காரணமாக கொலை செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். இதையடுத்து அவரது பேஸ்புக்கை பார்த்தேன். அதில் சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. என் தந்தையின் கொலைக்கு பின்னால் உள்ள உள்நோக்கத்தை போலீசால் மட்டுமே கூற முடியும். அதுதொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது'' எனக்கூறி அழுதார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+