ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
மும்பை : ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் வழக்கில், என்சிபி அதிகாரிகள் கோடிக்கணக்கில் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, முக்கிய சாட்சியான பிரபாகர் செயிலின் வாக்குமூலத்தை மும்பை காவல்துறை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருககான் மகன் ஆரியன் கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்டு பேரம் பேசப்பட்டதாக இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான பிரபாகர் செயில் சமூக வலைதளத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தன் மீது பொய் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மும்பை மாநகர போலீஸ் கமிஷ்னருக்கு அண்மையில் கடிதம் எழுதினார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணை நடத்த மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் ஞானஸ்வர சிங் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. விஜிலென்ஸ் விசாரணையை வான்டேயிடம் மட்டுமின்றி பிரபாகர் செயிலிடமும நடத்தப்படும்என்று அறிவிக்கப்பட்டது.

8 மணிநேரம்
இந்த சூழலில் மும்பை காவல்துறையும் இந்தவிவகாரத்தில் விசாரணையை தொடங்கி உள்ளது. ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் வழக்கில், என்சிபி அதிகாரிகள் கோடிக்கணக்கில் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, முக்கிய சாட்சியான பிரபாகர் செயிலின் வாக்குமூலத்தை மும்பை காவல்துறை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு
இது தொடர்பாக மும்பை நகர காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறும் போது, செவ்வாய்கிழமை மாலை மும்பையில் உள்ள நகர காவல் நிலையத்தில் முக்கிய சாட்சியான பிரபாகர் செயில் ஆஜராகினார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யும் பணி புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பிறகு, பிரபாகர் செயில் புதன்கிழமை அதிகாலை காவல்துறை உதவி ஆணையர் ஆசாத் மைதானின் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து மும்பை நகர காவல்துறையால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

விசாரணை ஏன்
இதனிடையே 25 கோடி பேர விவகாரம் தொடர்பாக பேசிய மும்பை போலீஸ், போதை பொருள் தடுப்பு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக நான்கு புகார்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த கூற்றுக்களை சரிபார்க்க விசாரணையை தொடங்கியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
பிரபாகர் செயிலின் பல்வேறு இடங்களுக்கு சென்றது, பேசிய மொபைல் போன் எண்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் இருப்பிடங்களையும் போலீஸ் குழுக்கள் சரிபார்த்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர், இதனிடையே மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக மும்பை காவல்துறை இரண்டு புகார்கள் வந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.

மறுக்கும் வான்கடே
அமைச்சர் மாலிக், சமீர் வான்கடே மீது பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார். மேலும் அவர் சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பதாகவும், மத்திய அரசு வேலையைப் பெறுவதற்காக அவரது சாதி ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் உள்ள பிரபலங்களை மிரட்டி பல கோடி பறித்ததாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடே, மிரட்டி பணம் பறித்தல் உள்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் நிராகரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications