Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்யன் கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - ஷூட்டிங்கில் இருந்து பாதியில் திரும்பிய ஷாருக்கான்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை நாளை வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திங்கட்கிழமையன்று அவரது வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாரூக் கான்- கவுரி கான் தம்பதியின் முதல் மகன் ஆர்யான் கான். அவருக்கு தற்போது 24 வயதாகிறது. இவருக்கு சுஹானா கான் என்ற தங்கையும், ஆப்ராம் கான் என்ற தம்பியும் உள்ளனர். முஸ்லிம் அப்பாவுக்கும்- இந்து அம்மாவுக்கும் பிறந்தவர் ஆர்யன்கான்.

ஆர்யனுக்கு ஷாருக்கான் போன்று நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை, ஆனால் படங்களை இயக்குவதில்தான் அதிகம் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது. ஒரு நேர்காணலில் ஆர்யன் ஒரு சிறந்த எழுத்தாளர் என ஷாருக் குறிப்பிட்டார். இயக்குநருக்கான படிப்புகளையும் ஆர்யன் அமெரிக்காவில் பயின்றுள்ளார். தி இன்க்ரிடிபில்ஸ் என்ற படத்திற்கு டப்பிங் கொடுத்ததற்காக சிறந்த குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.

Court allows Aryan khan to be remanded in custody - Shah Rukh Khan returns halfway through shooting

நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, ஆர்யானுக்கு நெருங்கிய தோழி. இருவரும் டேட்டிங் சென்றதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்லவில்லை, இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என குடும்பத்தினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பிறகு நவ்யாவும், தாங்கள் இருவரும் டேட் செய்யவில்லை என விளக்கமளித்திருந்தார்.

மற்ற ஸ்டார்களின் குழந்தைகளைப் போலவே ஆர்யன் கானும் வெளிநாட்டில்தான் தன் படிப்புகளை மேற்கொண்டார். லண்டனின் செவென் ஓக்ஸ் பள்ளியில் 2016ம் ஆண்டு படிப்பை முடித்தார். அதன்பிறகு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ், சினிமேட்டிக் ஆர்ட்ஸ், ஃபில்ம் அண்டு டெலிவிஷன் ப்ரடக்‌ஷன் படிப்பில் சேர்ந்து இந்த ஆண்டில்தான் பட்டம் பெற்றார். இந்த சூழ்நிலையில்தான் கப்பலில் நடைபெற்ற போதைப்பார்ட்டியில் ஆர்யன்கான் கலந்து கொண்டாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான எம்பிரஸ் மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் 'ஃபேஷன் டிவி இந்தியா' இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை கடல் பகுதியில் இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்த கப்பல் முழுதும் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் இன்று கைது செய்தது. இதையடுத்து, கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை காவலில் விசாரிக்க மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கோர்ட்டு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனிடையே ஆர்யன் கான் கைது செய்யப்பட்டிருப்பதை அவருடைய வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். திங்களன்று ஆரியன் கான் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படும் போது அவரது வழக்கறிஞர்கள் அவரது ஜாமீனுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த ஷாருக்கான் தனது படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+