பொன்னெட்டை திறந்து.. எல்லா கார்களும் வரிசையாக நிற்க.. எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த ஷாக் சம்பவம்! என்ன இது?
மும்பை: மும்பை - புனே தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலையில் வரிசையாக வாகனங்கள் வரிசைகட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக வாகனங்கள் பொன்னெட்டை திறந்து நீண்ட வரிசையில் நின்றது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில், எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பல்வேறு விடுமுறைகளுக்காக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

பெரும்பாலும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களுக்கு பலர் செல்கின்றனர். அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பலர் இதேபோல் பயணம் செய்கின்றனர்.
பெங்களூரில் நெருக்கடி: மேலும் பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கும் பலர் வருகின்றனர். இதனால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூடுவாஞ்சேரி வெளியே உள்ள சாவடி, பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி சாவடி, ஓசூர் உள்ளே நுழையும் சாவடி, தொப்பூர் கணவாய் அருகே உள்ள சாவடி என்று பல இடங்களில் வரிசையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர் விடுமுறை கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் அந்த சாலை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையிலும் அதிர்ச்சி: மும்பை - புனே தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலையில் வரிசையாக வாகனங்கள் வரிசைகட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக வாகனங்கள் பொன்னெட்டை திறந்து நீண்ட வரிசையில் நின்றது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
பொதுவாக மும்பை டூ புனே செல்ல 3 மணி நேரம் ஆகும். ஆனால் இதே சாலையில் பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகி உள்ளது. இதற்கு காரணம் டோல் கேட் கிடையாது. மாறாக பொன்னெட்டை திறந்து.. எல்லா கார்களும் வரிசையாக நின்ற காரணத்தால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதுதான் அங்கு மிக கடுமையான நெரிசல் ஏற்பட காரணம்.
ஏன் இப்படி: அங்கே கார்களில் கிளட்ச் சூடாகி உள்ளது. இதனால் பல கார்களில் கிளட்ச் எரிந்து.. மொத்தமாக வாகனத்தை கொண்டு செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல கார்களை டோ செய்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அங்கே கிளட்ச் சூடாகி, கார்கள் பொனெட்டை திறந்து வைத்து வரிசையாக நின்ற சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது. மும்பை - புனே தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலை மலை பாங்கான சாலை ஆகும். இந்த சாலை ஏற்றமாக இருக்கும். தொடர்ந்து ஏற்றமாக சாலை செல்லும். இதனால் கிளட்ச் எளிதில் சூடாகி எரிந்துவிடும். அப்படித்தான் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் சூடாகி பாதிப்பு அடைந்தது. முக்கியமாக வாகனங்கள் பொன்னெட்டை திறந்து நீண்ட வரிசையில் நின்றது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
-
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications