இத்தனை கோடியா? நன்கொடையில் புதிய ரெக்கார்ட்.. மும்பை ஐஐடியின் 1998 பேட்ஜ் மாணவர்கள் சாதனை!
மும்பை: மும்பை ஐஐடியில் 1998 ம் ஆண்டில் படித்தவர்கள் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மீண்டும் சந்தித்து கொண்டனர். இந்த வேளையில் அவர்கள் ஐஐடியின் வளர்ச்சிக்காக வழங்கிய நன்கொடை புதிய சாதனையை படைத்துள்ளது.
இன்று ஒவ்வொருவரும் நாம் பல்வேறு முக்கிய பணிகளில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் படித்த பள்ளி, பல்கலைக்கழகங்கள் தான். இப்படி நம் வாழ்க்கையை உயர்த்திய நாம் படித்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் மும்பை ஐஐடியில் 1998ல் படித்த மாணவர்கள் வழங்கிய நன்கொடை புதிய ரெக்கார்ட் செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐஐடி எனும் இந்திய தெழில்நுட்ப கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் முக்கிய கல்வி நிறுவனங்களாக ஐஐடி-க்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்வி நிறுவனங்களில் சேர ஏராளமானவர்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, மகாராஷ்டிராவில் மும்பை உள்பட பல நகரங்களில் ஐஐடி செயல்பட்டு வருகிறது. இந்த ஐஐடிக்களில் படிப்போர் பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல அரசு உதவிகளில் பொறுப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மும்பை ஐஐடியில் 1998 ம் ஆண்டில் படித்தவர்கள் 25ம் ஆண்டின் வெள்ளிவிழாவை கொண்டாடினார்கள்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவர்கள் மும்பை ஐஐடியின் வளர்ச்சிக்கு நன்கொடைகளை வழங்கினர். மொத்தமாக அவர்கள் ரூ.57 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
முன்னதாக 1971 ம் ஆண்டில் பயின்றவர்கள் பொன்விழா கொண்டாட்டத்தின்போது ரூ.41 கோடியை நன்கொடையாக வழங்கி இருந்ததே அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது 1998 ம் ஆண்டில் படித்தவர்கள் அதனை விட அதிகமாக நன்கொடை வழங்கி சாதனை படைத்துள்ளனர். இந்த நன்கொடையில் 200க்கும் அதிகமானவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications