தப்பு செய்தது அவர்.. தண்டனை இவருக்கா.. இந்திய அணியில் கோலி எடுக்கும் முடிவு... இதெல்லாம் சரியா?
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கடைசி ஒரு விக்கெட்டை இந்திய அணி வீழ்த்த முடியாமல் போனதால் ஆட்டம் டிரா ஆனது.
இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறார். இரண்டாவது ஆட்டத்தில் கோலி கேப்டனாக களமிறங்க உள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குறித்து பேட்டி அளித்த கோலி, எனக்கு எப்போதும் மும்பை வான்கடே மைதானம் பிடிக்கும். அங்கு நான் சிறப்பான ஆட்டங்களை ஆடி இருக்கிறேன். இந்திய அணிக்கு இந்த பிட்ச் எப்போதும் உதவிகரமாக இருந்துள்ளது. சாகா இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

கழுத்து
அவருக்கு கழுத்தில் இருந்த பிடிப்பு சரியாகிவிட்டது. ஆடும் 11 பேர் கொண்ட அணி குறித்து ஆலோசிக்க வேண்டும். மும்பை வானிலை இதில் முக்கிய பங்கு வகிக்கும். வானிலையை பொறுத்து அதற்கு ஏற்றபடி வீரர்களை அணியில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அணிதான் முக்கியம்.

தெரியும்
ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. அதிகம் யோசிக்க வேண்டியது இல்லை. இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கும் இது தெரியும். இந்திய அணிக்கு எப்போது யார் தேவை என்பதை கருதியே அணி தேர்வு செய்யப்படும். தேவை கருதியே வீரர்கள் தேர்வு நடக்கும். இதை அணியில் இருக்கும் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சாகா வருகிறார்
சாகா கழுத்து பிரச்சனை சரியாகிவிட்டாலும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். கே எஸ் பரத் கீப்பிங் சிறப்பாக உள்ளது. சாகாவிற்கும் வயதாகிவிட்டதால் அடுத்த ஒரு போட்டியில் கே.எஸ் பரத்திற்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து பார்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில வருடங்களாகவே கே. எஸ் பரத் லோக்கல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்
அதேபோல் கோலி வருவதால் இன்னொரு வீரரை தூக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி வருகிறார் என்பதால் அவரை நீக்க முடியாது. பார்ம்படி பார்த்தால் ரஹானேவைதான் நீக்க வேண்டும். ஆனால் அவர் மோசமான பார்மில் இருந்தாலும் நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மாறாக கோலி வருகையை முன்னிட்டு ஓப்பனர் மயங்க் அகர்வால் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நீக்கம்
மயங்க் அகர்வால் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் நியூசிலாந்து தொடரில்தான் ஓப்பனிங் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஒரே போட்டியில் அவரின் வாய்ப்பு பறிக்கப்பட உள்ளது. மாறாக ரஹானே பல போட்டிகளாக மோசமாக ஆடி வரும் நிலையிலும் அவர் நீக்கப்பட வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

கேள்வி
ரஹானேதான் சரியாக ஆடாமல் தவறு செய்தார். ஆனால் அவரை நீக்காமல் இந்திய அணி மயங்க் அகர்வாலை நீக்க போகிறதா .. ரஹானேவிற்கு எத்தனை வாய்ப்புதான் கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். பெரும்பாலும் இரண்டாவது டெஸ்டில் மயங்க் ஆட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். இதனால் ரஹானேவிற்கு ஒரு விதி மயங்க் அகர்வாலுக்கு ஒரு விதியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications