மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறதா?.. பிரஷாந்த் பூஷண் எழுப்பிய முக்கிய கேள்விகள்!

Google Oneindia Tamil News

மும்பை: தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறதா என்றும் கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் நேர்மையில் பெரும் கேள்வி எழுந்துள்ளது என்றும் மகாராஷ்டிராவில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் கூறினார்.

சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் ''ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்கள்'' என்ற தலைப்பில் மராத்தி நாளிதழ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரசாந்த் பூஷன் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு.. 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றம்.. பரபரப்பு ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு.. 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றம்.. பரபரப்பு

தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான்..

தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான்..

தேர்தல் ஆணையம் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் ஆளும் கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் போது வாய் மூடி தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சத்தை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

ஆளும் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே

ஆளும் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே

டி.என் ஷேஷன் தலைமை தேர்தல் ஆணையரான பிறகு பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் நியாயமாகவும் பாரபட்சம் இன்றியும் நடந்து கொண்டதை நாம் பார்த்தோம். ஆனால் கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் நேர்மையில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் எப்போது முடிவு செய்யும் என்று அரசுக்கு கூட முன்பெல்லாம் தெரியாது. ஆனால், தற்போது, ஆளும் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே தேர்தல் எப்போது நடக்கும் என்று சொல்கின்றனர்.

சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை

சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை

இவர்கள் குறிப்பிடும் இதே தேதியைத்தான் தேர்தல் ஆணையமும் அறிவிக்கிறது. தேர்தல் ஆணையம் இனியும் நியாயமாக இருக்காது. ஏனென்றால், தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் தேர்வு அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. இதற்கென சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை. தற்போது அரசு என்ன செய்கிறது என்றால் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் பலரும் குஜராத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களும் அரசாங்கம் சொல்வதை கேட்க கூடியவர்களாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் முன் உள்ள பிரச்சினையாக இதுவும் உள்ளது.

அப்பட்டமாக நடக்கிறது

அப்பட்டமாக நடக்கிறது

சட்டம் மற்றும் நிர்வாகத்தை வரம்புக்குள் வைத்திருக்கவும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நீதித்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது இது எதுவும் நடப்பதில்லை என்பதை நாம் பார்த்து வருகிறோம். அரசுக்கு எதிராக பேசுபவர்கள் தேசத்துரோக வழக்கை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் போலியான வழக்குகளும் போடப்படுகின்றன. இதனால், பல ஆண்டுகளுக்கு ஜாமீன் கூட கிடைப்பதில்லை. இது அப்பட்டமாக நடக்கிறது.

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்

இதற்கு எதிராக நமது நீதித்துறை செயல்பட முடியவில்லை. இதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஊடகமும் அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. காவல்துறை அமைப்புகளும் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முற்றிலும் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மீண்டும் வாக்குச்சீட்டு முறை

மீண்டும் வாக்குச்சீட்டு முறை

இதனால், ஜனநாயகம் உண்மையான அச்சுறுத்தலில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே பல நாடுகளும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியதை போல இங்கும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். ஜனநாயகத்தின் முன் உள்ள இந்த சவால்களை சமாளிக்க, பல்வேறு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தனியார்மயமாக்குவது

தனியார்மயமாக்குவது

நாடாளுமன்ற குழுவும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால் இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவர்களால் மட்டும் செய்துவிட முடியாது. மக்கள் தங்கள் குரல்களை தற்போது எழுப்ப வேண்டும். லோக்பால் மசோதாவிற்கு குரல் கொடுத்ததை போல நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்கலாம். வேலைவாய்ப்பு இன்மை,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை இதுவும் பலப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

English summary
Senior advocate Prashant Bhushan said at a seminar in Maharashtra whether the Election Commission is behaving fairly and the integrity of the Election Commission has been raised for the last six to seven years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X