Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானி வீட்டு கிச்சனில் மின்னும் பீங்கான்.. இலங்கைக்கே ஜெட் பிளைட் எடுத்துட்டு போன நீதா.. அம்மாடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனி விமானத்தில் இலங்கைக்கு ஒருமுறை போய் வந்தாராம்.. இதில் என்னங்க ஆச்சரியம் இருக்க போகுது? அவரிடம் இல்லாத பணமா, இல்லை வசதியா? அவர் விமானத்தில் போவதில் ஆச்சரியம் இல்லையே என்று நீங்க கேட்கலாம்.. ஆனால் இந்த இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன? இலங்கையிலிருந்து அவர் வாங்கி வந்த பொருட்கள் என்ன? என்பதுதான் இந்த விமான பயணம் குறித்த சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இந்தியாவின் மிகப் பிரபலமான பெண் தொழிலதிபராக விளங்கி வருகிறார்.. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவராகவும் நீதா அம்பானி பதவி வகித்து வருகிறார்.

ambani nita ambani

அறக்கட்டளை: இதைத்தவிர, ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளையும் செய்து வருகிறார்.. முக்கியமாக, கல்வி, மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றில் நிதியுதவியை தாராளமாக வழங்கி வருகிறார் நீதா.

பிரபலமான பெண்மணி என்பதால், இவரது நடை, உடை, வாழ்க்கை முறையே தனித்துவமாக இருக்கும்... உலகளவில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாக கருதப்படும் மும்பையில் உள்ள 27 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடமான ஆன்டிலியாவில் நீதா அம்பானி வசித்து வருகிறார்.

காஸ்ட்லி பொருட்கள்: எப்போதுமே ஆரம்பரமான பொருள்களையே பயன்படுத்துவார்... உயர் ரக வாட்ச்கள், காலணிகள், ஹேண்ட்பேக்குகள் போன்றவைகளில்கூட, பெரிய பிராண்டுகளையே நீதா அம்பானி பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு Bulgari, Cartier, Gucci போன்ற பிராண்டுகள் நீதாவின் ஸ்பெஷாலிட்டியாகும்..

அதேபோல, ஆடை, ஆபரணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருபவர் நிதா அம்பானி.. எனவே, நீதா அணியும் ஆடைகள், அணிகலன்கள், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே, பலரது கவனத்தை சுண்டி இழுக்கும்.. மேலும், நீதா அம்பானியின் உடைகள், நகைகளின் போட்டோக்கள் இணையத்திலும் அவ்வப்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இவ்வளவு ஆடம்பரமான செலவாளியாக இருந்தாலும் கூட பெண்களுக்கே உரிய அந்த சிக்கண மனசும் நீதாவிடம் நிறையவே இருக்கிறது. பர்ச்சேஸ் எல்லாம் பார்த்து பார்த்துதான் செய்வாராம். ஏதாவது மிச்சம் பிடிக்க முடிகிறதா என்று பார்ப்பாராம்.

இலங்கை விசிட்: இப்படித்தான் கடந்த 2010 ஆண்டு மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் திடீரென இலங்கைக்கு சென்றுள்ளார் நீதா அம்பானி.. அங்கு அவர் சென்றதற்கான நோக்கம் என்னவென்றால் தனது கிச்சனுக்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காகத்தானாம்.

இலங்கையிலிருந்து பீங்கான் கப் உள்ளிட்ட டைனிங் செட்களை வாங்கிட்டு வந்திருக்கிறாராம்.. கிட்டத்தட்ட 23,000 பொருட்களை வாங்கினாராம். அதன் விலை எவ்வளவு தெரியுமா? இதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

நீதா அம்பானி எப்போது இலங்கை சென்றாலும், தனக்கு பிரியமான பொருட்களை வாங்கி வருவது அவரது பழக்கமாகும். 22 காரட் தங்கம் மற்றும் பிளாட்டினத்தை கொண்டு டிரிம் செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களான Noritake, இலங்கையில் மிகவும் ஃபேமஸானது.. அதன் உற்பத்தியும் இலங்கையில் அதிகம்.. இங்கிருந்துதான் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.. விலையும் கணிசமாக கிடைக்கிறது.. எனவேதான், தனியார் ஜெட் மூலம் இலங்கைக்கு பயணம் செய்து, பீங்கான் பொருட்களை வாங்கி வந்திருக்கிறார்.

கோப்பை வேலைப்பாடுகள்: ஜப்பானைச் சேர்ந்த பழம்பெருமை கொண்ட நிறுவனம்தான் இந்த நோரிடெக் நிறுவனம். இதன் பொருட்களையே அதிகம் வாங்குவாராம் நீதா. இதற்கு காரணம், ஒவ்வொரு கோப்பையிலும் தங்கத்தாலான வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்குமாம்.

மேலும் பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் இவை. இந்த நோரிடெக் நிறுவனத்திற்கு மும்பையில் கூட கிளை உள்ளது. அதுவும் நீதாவின் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. ஆனாலும் இலங்கையில்தான் மிகவும் குறைந்த விலையில் இவை கிடைக்கிறதாம். இதனால்தான் பிளைட்டை எடுத்துக் கொண்டு இலங்கைக்கே போய் வாங்கி வந்தாராம் நீதா.

விலையை பாருங்க: இவற்றின் விலை இலங்கையில் 25,000 வரை இருக்குமாம். அதுவே இந்தியாவில் கிட்டத்தட்ட 1.70 லட்சம் அளவுக்கு விற்கப்படுகிறதாம். இதனால்தான் இலங்கைக்கே போய் வாங்கி விட்டாராம் நீதா.

தேநீர் கோப்பைகள்: நீதா அம்பானி டீ குடிக்கப் பயன்படுத்தும் ஒரு டீ கப்பின் விலை என்ன தெரியுமா.. ஜஸ்ட் ரூ. 3 லட்சம்தான் ஜென்டில்மேன். அது ஜப்பானிய தயாரிப்பு டீ கப்பாகும். இதுக்கே மயக்கம் வருதா.. இன்னும் கேளுங்க. அவரிடம் உள்ள டீ கப், சாசர் உள்ளிட்ட செட்களின் மொத்த மதிப்பு என்ன தெரியுமா.. 15 கோடியாம். அந்த அளவுக்கு சேர்த்து வைத்துள்ளாராம்.

பீங்கான்கள்: ஆக மொத்தம், ஜெட் விமானம் மூலம் இலங்கை சென்று நீதா அம்பானி, பீங்கான்களை வாங்கி வந்தது ஆடம்பரமான வாழ்க்கை முறையாக தெரிந்தாலும், ஏறக்குறைய 70-80% செலவை இதன்மூலம் சேமித்து, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் இன்னொரு புத்திசாலித்தனமாக முடிவாகவே இது பார்க்கப்பட்டு வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+