மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்மார்ட் போன் ஆர்டர் பண்ணி செங்கல் வாங்குனவங்களா நீங்க.. அப்போ ப்ளீஸ் இந்த நியூசைப் படிக்காதீங்க!

ஆன்லைன் வர்த்தக இணையதளம் ஒன்றில் வாய் சுத்திரிப்பான் ஆர்டர் செய்த நபருக்கு ஸ்மார்ட் போன் கிடைத்த வினோத சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: ஆன்லைனில் வாய் சுத்திகரிப்பான் ஆர்டர் செய்தவருக்கு, தவறுதலாக ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் பார்சலில் வந்தது என்ற செய்தியை அடிக்கடி நாம் பார்த்திருப்போம். இதனால் தான் ஆன்லைனில் ஆர்டர் செய்வதென்றாலே பலருக்கும் பயம் வந்து விடும்.

ஆனால் ஒருவருக்கு அதிர்ஷடமும் நல்ல நேரமும் ஒன்றாக வந்து சேர்ந்தால் மவுத்வாஷ் கூட ஸ்மார்ட் போனாக மாறிவிடும். அட ஆமாங்க.. உண்மையாகவே மும்பையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வாட்ஸ் அப்பில் ஆர்டர் கொடுத்தால் 50% தள்ளுபடியுடன் மருந்துகள் வீடு தேடி வரும் வாட்ஸ் அப்பில் ஆர்டர் கொடுத்தால் 50% தள்ளுபடியுடன் மருந்துகள் வீடு தேடி வரும்

ஆன்லைனில் ஆர்டர்

ஆன்லைனில் ஆர்டர்

மும்பையை சேர்ந்தவர் லோகேஷ் தாகா. இவர் ஆன்லைன் வர்த்தக இணையதளம் ஒன்றில் வாய் சுத்திரிப்பான் (மவுத்வாஷ்) ஆர்டர் செய்திருக்கிறார். அதன் விலை ரூ.396 மட்டுமே. ஆனால் லோகேஷுக்கு வந்து சேர்ந்தது ரூ.13000 மதிப்புடைய பார்சல். அதாவது மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ஷ்டவசமாக லேட்டெஸ்ட் ஸ்மார்ட் போன் ஒன்று கிடைத்தது.

மாறிய விலாசம்

மாறிய விலாசம்

அந்த பார்சலின் மீது எழுதப்பட்டிருந்த முகவரியிலும் தனது பெயர் மற்றும் விலாசம் சரியாக எழுதப்பட்டிருந்ததால் ஒன்னும் புரியாமல் குழம்பிபோனார் லோகேஷ். பார்சலை முழுவையாக திறந்து பார்த்தபோது தான் அதில் இருந்த ரசீதில் வேறு ஒருவரின் பெயர் மற்றும் முகவரி இருந்ததை கண்டார் லோகேஷ்.

திருப்பி வாங்க மறுப்பு

திருப்பி வாங்க மறுப்பு

இதையடுத்து தனக்கு வந்த பார்சலை திருப்பி அனுப்ப முயற்சித்தார் அவர். ஆனால் லோகேஷ் ஆர்டர் செய்தது மவுத்வாஷ் என்பதால் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அதை ரிட்டன் எடுக்க மறுத்துவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்து முழுவிவரத்துடன் லோகேஷ் இமெயில் அனுப்பி இருக்கிறார்.

முயற்சி

முயற்சி

தவறுதலாக தனக்கு வந்த செல்போனை உரிய நபரிடம் எப்படியாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும் என லோகேஷ் உறுதியாக இருக்கிறார். இந்த தகவலை எல்லாம் லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் "உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு பாஸ்", என லோகேஷை புகழ்ந்து தள்ளிவருகின்றனர்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

அதிர்ஷ்டவசமாக கிடைத்த ஸ்மார்ட்போனை தானே வைத்துக்கொள்ளாமல், அதன் உரிமையாளருக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்ட மும்பை மனிதரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுகளுக்கு முழு தகுதி உடையவர் லோகேஷ் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

English summary
Netizens hails Mumbai man Lokesh Daga who is honestly trying to return the smart phone which he got in luck for ordering mouthwash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X