Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொகுசு வீடுகள்.. உலகிலேயே அதிக விலை உயர்ந்த நகரங்கள்.. மும்பை 4வது இடம்.. முதலிடம் எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆடம்பரமான குடியிருப்புகளின் விலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகள் உலகிலேயே அதிக விலை உயர்வை கண்ட நகரங்களில் 4 வது இடத்திற்கு மும்பை முன்னேறியது. இந்த பட்டியலில் பெங்களூரு 17 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் ஆடம்பர மற்றும் சொகுசு வீடுகளின்தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய சொகுசு வீடுகளின்தேவை அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமான பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய வீடுகனை விரும்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரும், மேல்தட்டு வர்க்ககத்தினரை போல் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ஆடம்பர வீடுகளின் விலை கணிசமாக இந்தியாவில் உயர்ந்துள்ளது.

Mumbai Ranks 4th On Prime Global Cities Index, Manila Replaces Dubai To Grab first position

குறிப்பாக மும்பை, பெங்களூரு, டெல்லியில் ஆடம்பர குடியிருப்புகளின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. உலகிலேயே ஆடம்பர குடியிருப்புகளின் விலை அதிகரித்த நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க், 'பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் க்யூ3 2023' என்ற பெயரில் ஆடம்பர வீடுகளின் விலை அதிகரித்த உலகின் முக்கிய நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் , மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய 3 இந்திய நகரங்களிலும் ஆடம்பர வீடுகளின் சராசரி ஆண்டு விலையில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2023 மூன்றாம் காலாண்டு முடிவில் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவின் படி, உலகிலேயே ஆடம்பர வீடுகள் அதிக விலை உயர்வை கண்ட நகங்களில் 4 வது இடத்திற்கு மும்பை முன்னேறியது. 2022 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 22 வது இடத்தில் இருந்த மும்பை வெறும் ஒரு ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி உள்ளது. மும்பையில் ஆடம்பர வீடுகளின் விலை 6.5% அதிகரித்துள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருவும் இந்த பட்டியலில் கணிசமாக முன்னேறி உள்ளன. டெல்லி 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 36வது இடத்தில் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் 10வது இடத்திற்கு 4.1% வளர்ச்சியுடன் முன்னேறி உள்ளது.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 27 வது இடத்தில் இருந்த பெங்களூரு, இப்போது 2.2% வளர்ச்சியுடன் 17 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. செப்டம்பர் 2023 இல் முடிவடைந்த 12 மாத காலத்தில் 46 நகரங்களில் வருடாந்திர ஆடம்பர குடியிருப்பு விலைகளின் சராசரி உயர்வு 2.1% ஆக பதிவாகியுள்ளது. இது 2022 மூன்றாம் காலாண்டை ஒப்பிடும்போது வலுவான வளர்ச்சியாகும்.

நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஷிஷிர் பைஜால் கூறுகையில், "சந்தையின் வளர்ச்சியும், வலுவான விலை உயர்வு, அதிகப்படியா போன்ற காரணங்களால் உலக தரவரிசையில் மும்பை பெரிய அளவில் முன்னேறி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்ததை விட, இப்போது ஆடம்பர வீடுகள் அதிகம் விற்பனையாகி உள்ளது. வீடு வாங்குபவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவது மாதியான வீடுகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. நாட்டின் நிலையான பொருளாதார வாய்ப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையை மேம்படுத்துவது போன்றவை தான் இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும்" என்றார்.

ஆடம்பர குடியிருப்புகள் உலகிலேயே அதிக விலை உயர்வை கண்ட நகங்களில் மணிலா 21.2% என்ற விகிதத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மணிலாவில் வலுவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பால் துபாயை முந்தி, ஒரே ஆண்டில் மணிலா முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+