• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

10 வருடங்களில் முதல்முறை.. ஒரே நாளில் வானத்தை பிய்த்து ஊற்றிய மழை! சென்னை போலவே சிக்கிய மும்பை

|
  MUMBAI RAINS | வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை! மீட்பு பணிகள் தீவிரம்- வீடியோ

  மும்பை: 24 மணி நேரத்திற்குள், மும்பையில் 234 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இரு தினங்கள் முன்பாக பெய்த இந்த கனமழை, கடந்த பத்தாண்டுகளில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும். அதன்பிறகு மழை விடாமல் கொட்டி வருகிறது.

  மும்பைக்கு வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் மழை பெய்யக்கூடும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.

  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இந்திய கடற்படை பல குழுக்களை அனுப்பியுள்ளது. அவர்கள் படகுகளுடன் விரைந்துள்ளனர்.

  தண்டவாளங்கள்

  தண்டவாளங்கள்

  ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பல புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலைக்கு நடுவே, நேற்றிரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது லேசான விபத்து ஏற்பட்டது. நல்லவேளையாக பயணிகள் தப்பினர்.

  விமான சேவை

  விமான சேவை

  இதையடுத்து, மும்பை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பிவிடப்பட்டன. விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாற்றிவிடப்பட்ட விமானங்கள் அகமதாபாத், கோவா மற்றும் பெங்களூருக்கு அனுப்பப்படுகின்றன. நேற்றிரவு, ஜெய்ப்பூரிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போதுதான் விபத்து ஏற்பட்டது. பிரதான ஓடுபாதை மூடப்பட்ட பின்னர் இரண்டாம் நிலை ஓடுபாதை விமான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

  விடுமுறை

  விடுமுறை

  இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்ற கணிப்புக்கு மத்தியில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும், தானே நகரங்களில் பொது விடுமுறையை அறிவித்துள்ளது அரசு. மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார், முதல்வர் ஃபட்னாவிஸ். அவசரகால சேவைகளைத் தவிர்த்து, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று மும்பையில் விடுமுறை, என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் இன்று மூடப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லியுள்ளன.

  சுவர் விபத்து

  இன்று காலை, மும்பையின் மலாட் கிழக்கு பகுதியில், காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். 10 வயது சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், அவரை மீட்கும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார். மலாட்டில் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

  சென்னை மழை

  சென்னை மழை

  2015ம் ஆண்டு டிசம்பரில், சென்னையில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று ஒரே நாள் இரவில் 50 செ.மீ அளவுக்கு மழை பெய்ததுதான், இந்த வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என கூறப்பட்டது. இப்போது மும்பையும் அதே நிலையில்தான் உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Since yesterday, Mumbai has received the heaviest rain in a decade. The weather office has warned of more rain in Mumbai, Palghar, Thane and Raigad in the next few hours.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more