இந்தியாவில் புதிதாக 21 பேருக்கு ஓமிக்ரான் உறுதி...பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நாட்டில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.
தற்போது 77 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த வாரம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. திங்கட்கிழமை இரவு வரை 40 ஆக இருந்த தேசிய அளவிலான ஓமிக்ரான் பாதிப்பு தற்போது வரை 61 ஆக உயர்ந்துள்ளது. இதிலும் மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக 8 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானதால், அந்த மாநிலத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட 8 பேரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டன் சென்று திரும்பிய ஒருவருடன் தொடர்பில் இருந்ததாலேயே இவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 8 பேரில் ஒருவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 5 பேருக்கு மட்டும் லேசான அறிகுறிகள் இருப்பதாக மராட்டிய மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் இதுவரை 17 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் 6 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3, ஆந்திரபிரதேசம் , சண்டிகர் மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications