ஒற்றை படத்தில் தெரிந்த வலி.. சிறுவர்கள் தோளில் தொங்கிய ராகுல்! ஒற்றுமை யாத்திரைக்கு ஓடி வரும் மக்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அங்கு வந்த 2 சிறுவர்களின் தோள் மீது கைபோட்டு தொங்கியபடி நிற்கும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் 2 மாதத்திற்கு முன் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.

தமிழ்நாடு, கேரளா
ராகுல் காந்தியின் யாத்திரை தமிழ்நாட்டில் தொடங்கி கேரளாவில் 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகா
கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் இவர் நடைபயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்கை செலுத்தினார்.

தெலுங்கானா
கர்நாடகா மாநிலத்தில் நடைபயணத்தை முடித்துக்கொண்டு தெலுங்கானா மாநில எல்லைக்குள் ராகுல் காந்தி நுழைந்தார். அம்மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் வழியாக சென்று பல தரப்பட்ட மக்களை சந்தித்து பேசியனார். 15 நாட்கள் தெலுங்கானாவில் நடைபயணம் சென்ற ராகுல் காந்தியுடன் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மகாராஷ்டிரா
கடந்த 7 ஆம் தேதி நடைபயணத்தின் 60 வது நாளை நிறைவு செய்த ராகுல் காந்தி, தெலுங்கானா நடைபயணத்தை முடித்துக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் சென்றார். அவருக்கு செல்லும் வழியெங்கும் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதியவர்
இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெத் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு அப்பகுதி மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். முதியவர் ஒருவரின் தோளில் கைபோட்டு ராகுல் காந்தி பேசிக்கொண்டே வரும் படம் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சிறுவர்கள்
அதேபோல், 2 சிறுவர்களுடன் டேபில் எதையோ பார்த்தபடி நடந்து சென்ற் ராகுல் காந்தி, அதே சிறுவர்களின் தோளில் தனது 2 கைகளையும் போட்டுக்கொண்டு தொங்கியபடி நிற்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் வலியை அந்த புகைப்படம் காட்டுவதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications