தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் .. கலெக்டர் அதிரடி.. எங்கு தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.

26வது இடம்
இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று பின்தங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெறும் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் பலரும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இதையடுத்து அவுரங்காபாத் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமையல் கேஸ்
அதில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழப்பு
தடுப்பூசி போட வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்த காரணம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு குறைவு என்பது தான். கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் தடுப்பூசி இரு தவணையும் செலுத்தியோரில் ஒருவர் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்தாதோரில் 16 பேர் மோசமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேரிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

20 மடங்கு
அதேபோல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், தடுப்பூசி செலுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது செலுத்தாதவர்கள் 20 மடங்கு கொரோனாவால் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications