மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி? பகீர் புகார் கூறும் சஞ்சர் ராவத்! பின்னணியில் பெரிய பில்டர்?
மும்பை
மும்பை : மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி செய்கிறது எனவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால் இந்த வழக்கு தொடர்பாக அவரது சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கியது.

சிவசேனா சஞ்சய் ராவத்
1,034 கோடி பத்ரா சால் நில ஊழல் வழக்கில் அவருக்கு தொடர்புடைய சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராவத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் மும்பையை யூனியன் பிரதேசமாக்க பாஜக சதி செய்கிறது எனவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

பாஜக மீது புகார்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி கிரித் சோமையா மற்றும் அந்த கட்சித் தலைவர்கள், மும்பையின் பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அடங்கிய குழு இந்த சதியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவோடு அடிக்கடி முரண்பட்ட கருத்து மோதல்களில் ஈடுபட்டு வரும் ராவத், நாட்டின் நிதித் தலைநகரை யூனியன் பிரதேசம் ஆக்குவதற்காக முன்னேற்பாடுகள் நடத்தப்படுவதாகவும், பாஜக தலைவர் கிரித் சோமையா தலைமையில் இந்த சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சதி திட்டம்
பிரபல செய்தி நிறுவனமான ANI இடம் பேசிய அவர், "மும்பையை மத்திய அரசால் ஆளக்கூடிய நகரமாக மாற்றுவதற்காக நிதியுதவி செய்த ஒருவர் மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய பில்டர் எனவும், வாரணாசியைச் சேர்ந்த ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். முழு சதித்திட்டமும் கிரித் சோமையா தலைமையில் நடக்கிறது" என கூறினார். இந்த சதித்திட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிந்திருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில், மும்பையில் மராத்தி மக்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறி மும்பை மாநகரை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சோமையா தலைமையிலான குழு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் ராவத் மேலும் கூறினார்.

கடும் விமர்சனம்
தனக்கு தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததையடுத்து ராவத் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடியிருந்தார். தனக்கும் பிற கட்சித் தலைவர்களுக்கும் எதிரான மத்திய ஏஜென்சிகளின் சோதனைகளுக்கு தான் பயப்படவில்லை என்றும் அவர் கூறினார். ED, NCB போன்ற மத்திய ஏஜென்சிகளுக்கு முன்பாக மகாராஷ்டிரா தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications