போதைப்பொருள் வழக்கில் கைது.. மும்பை சிறையில் மகன் ஆர்யான்கானை சந்தித்து பேசிய ஷாருக்கான்!
மும்பை: பாலிவுட் திரையுலகம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போதைப்பொருள் சுழலில் சிக்கி தவித்து வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்கனவே பல்வேறு பிரபலங்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Recommended Video
இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டது பாலிவுட் திரையுலகையே உலுக்கி போட்டது.

சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2-ம் தேதி கடலோரத்தில் ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடந்தது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஷாருக்கானின் மகன் கைது
அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், முக்கிய புள்ளிகள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஆர்யான்கான் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் போதை தடுப்பு பிரிவு போலீஸார் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

நீதிமன்றம் மறுப்பு
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ஆர்யான் கான் உள்ளிட்டவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளனர். ஆர்யான் கான் தனது வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். ''ஆர்யான்கான் தனது நண்பரான அர்பாஸ் மெர்சண்ட்டிடம் இருந்து 6 கிராம் போதைப்பொருளை வாங்கியதை ஒப்புக் கொண்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி போதை தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதனால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.
|
மகனை சந்தித்த ஷாருக்கான்
இதேபோல் நேற்றும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான்கானை தந்தையும், நடிகருமான ஷாருக்கான் இன்று சந்தித்தார். ஆர்யான்கான் கைது செய்யப்பட்ட பிறகு அவரை ஷாருக்கான் முதன்முறையாக சந்தித்துள்ளார். ஷாருக்கான் சுமார் 20 நிமிடங்கள் தனது மகனை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications