ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தலைமையா? சரத்பவார் திட்டவடட்ட மறுப்பு
மும்பை: நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே ஆலோசனை நடத்தியதாகவும் 2024 லோக்சபா தேர்தல் குறித்தோ ஜனாதிபதி தேர்தல் பற்றியோ ஆலோசனை நடத்தவே இல்லை என சரத்பவார் விளக்கம் அளித்துள்ள்ளார்.
குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என புதிர் பேட்டி கொடுத்தார்.
அப்போதே ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா பாஜக? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் சரத்பவார் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் இந்த தகவல்களுக்கு விடை கிடைக்கவில்லை.

சோனியா குடும்பம்- பி.கே. சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் (பி.கே.) நேற்று சுமார் 2 மணிநேரம் சந்தித்து பேசினார். முதலில் இந்த சந்திப்பு பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை என கூறப்பட்டது.

பரபரத்த தகவல்கள்
பின்னர் ஜனாதிபதி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து விவாதித்தனர் என அடுத்த கட்டமாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்க்கும் முயற்சிகளை சோனியா குடும்பம் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் பரபரத்தன.

சரத்பவார் தூதரா?
இன்னொரு பக்கம், பாஜக- காங்கிரஸ் ஆதரவுடன் சரத்பவார் ஜனாதிபதியாக விரும்புகிறார்; இதற்காகவே பிரசாந்த் கிஷோரை தூதராக அனுப்பி வைத்துள்ளார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டின. இப்படி சரத்பவாரை மையமாக வைத்து நேற்று முதல் இடைவிடாமல் பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

சரத்பவார் திட்டவட்ட மறுப்பு
இந்த நிலையில் இவை அனைத்துக்கும் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை.

பி.கேவுடன் பேசியது இதுதான்!
பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாக மட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ ஜனாதிபதி தேர்தல் குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. தேர்தல் வியூகப் பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

கூட்டணி தலைவரும் இல்லை
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்த கூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை. இவ்வாறு சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications