Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் நுழைந்த குற்றப்பிரிவு போலீசார்.. தீவிரமான சோதனை.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக ராஜ்குந்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது மும்பையில் ஆபாச படம் தயாரித்து அதை லண்டனில் அப்லோடு செய்து வந்துள்ளார்கள்.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கின் முக்கிய சதிகாரராக செயல்பட்ட ராஜ்குந்த்ராவை கைது செய்தார்கள். இவ்வழக்கில் அவருக்கு எதிரான போதுமான சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது .

ராஜ்குந்த்ரா

ராஜ்குந்த்ரா

பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ராஜ்குந்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆபாச படங்களை எடுப்பதற்காக நடிகர்களை கட்டாயப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை

விசாரணை

மேற்கண்ட இரு எப்ஐஆர் அடிப்படையில் கடந்த வாரம் ஒன்பது பேரை மும்பை போலீசார் கைது செய்தார்கள் . கைது செய்ப்பட்ட ராஜ் குந்த்ராவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

புகார் கூறலாம்

புகார் கூறலாம்

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், "ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ராவை கைது செய்துள்ளோம். ராஜ்குந்தராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறோம். . ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே முன் வந்து புகார் கூறலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்கள்.

போலீசார் ரெய்டு

போலீசார் ரெய்டு

இந்நிலையில் மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ரா ஆபாச பட வழக்கில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என்ற நோக்கில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+