மகாராஷ்டிராவில் ஓர் ‛செம்மலை‛.. சூரத் ரெசார்ட்டில் இருந்து தப்பிய சிவசேனா எம்எல்ஏ! உத்தவுக்கு ஆதரவு
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில் மாரடைப்பு என கூறப்பட்ட சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தப்பித்து நாக்பூர் வந்துள்ளார். மேலும் அவர், ‛‛நான் கடத்தபட்டேன். எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை. எனது ஆதரவு உத்தவ் தாக்கரேவுக்கு தான்'' என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அதற்கு ஆட்சி அமைக்க தேவையான இடம் கிடைக்கவில்லை. மேலும் கூட்டணியில் இருந்த சிவசேனாவும் விலகியதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
மேலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனார். இதனால் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.

சிவசேனா-பாஜக மோதல் போக்கு
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் சமீபகாலமாக சிவசேனா, பாஜகவை கடுமையாக எதிர்க்க துவங்கியது. மேலும் ராஜ்யசபா, எம்எல்சி தேர்தலில் சிவசேனா கூட்டணி கூடுதலாக ஒரு வேட்பாளரை இறக்கி பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்தது. இதனால் மோதல் போக்கு உச்சநிலைக்கு சென்றது.

இடம் மாறிய அதிருப்தி எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். முதலில் குஜராத் சூரத்தில் தங்கியிருந்தவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதை தொடர்ந்து அங்கிருந்து இடத்தை மாற்றினர்.

எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு
இதனால் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் சில சிவசேனா எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி இருந்தார். அதாவது மகாராஷ்டிர மாநிலம் பாலாபூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் நிதின் தேஷ்முக் உள்பட 4 பேர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலீசில் புகார்
இந்நிலையில் தான் நிதிஷ் தேஷ்முக்கின் மனைவி பிரஞ்சலி, அகோலா போலீசில் புகார் செய்துள்ளார். அதில், ‛‛ ஜூன் 20 இரவு 7 மணிக்கு எனது கணவர் என்னிடம் பேசினார். அதன்பிறகு அவர் பேசவில்லை. போன் மாற்றப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் கடத்தப்பட்டு இருக்கலாம்'' என புகார் அளித்தார். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பிய நிதின் தேஷ்முக்
இந்நிலையில் தான் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ நிதின் தேஷ்முக், சூரத் ரெசார்ட்டில் இருந்து தப்பினார். எம்எல்ஏக்கள் அனைவரையும் அசாம் மாநிலம் கவுகாத்தி ரெசார்ட்டுக்கு மாற்ற முயன்றபோது அவர் அங்கிருந்து தப்ப திட்டமிட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று நாக்பூர் வந்த நிதின் தேஷ்முக் நிருபர்களை சந்தித்தார்.

உத்தவ் தாக்கரேவுக்கு தான் ஆதரவு
அப்போது அவர் ‛‛நான் ரெசார்ட்டில் இருந்து தப்பித்து அதிகாலை 3 மணிக்கு சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது 100க்கும் அதிகமான போலீசார் வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனக்கு மாரடைப்பு என கூறி தகவலை வெளியிட்டனர். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னை குஜராத் மாநிலம் சூரத்துக்கு கடத்தி சென்றுவிட்டனர். எனது ஆதரவு எப்போதும் உத்தவ் தாக்கரேவுக்கு தான்'' என தெரிவித்துள்ளார்.

தப்பியது எப்படி?
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து நிதின் தேஷ்முக், முன்னாள் சிவசேனா நிர்வாகி பரேஷ் கேர் உதவியுடன் தப்பியுள்ளார். இதுபற்றி பரேஷ் கேர் கூறுகையில், ‛‛என்னை அதிகாலை 3 மணிக்கு நிதின் தேஷ்முக் போனில் அழைத்தார். இதையடுத்து அவரை அழைத்து சென்றேன். எனது போன் நம்பரை மும்பையில் இருந்து அவர் பெற்று தொடர்பு கொண்டார்'' என்றார்.

சிவசேனாவின் ‛செம்மலை’
vமுன்னதாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுகவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அப்போதைய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை தப்பித்து ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் தற்போது மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் தான் குஜராத் சூரத் ரெசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட நிதின் தேஷ்முக், அங்கிருந்து தப்பித்து உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications