யார் பாத்த வேலையா இது? புகைப்பட கண்காட்சியில் “அந்த” புகைப்படங்களால் சர்ச்சை
மும்பை: புனே நகரில் கலைக்கூடம் ஒன்றில் நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண புகைப்படங்கள் இடம் பெற்றதால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர் கண்காட்சியை உடனடியாக நிறுத்தி உள்ளனர்.
பிரபல புகைப்பட கலைஞரான அக்சய் மாலி, தனது புகைப்படங்கள் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறார். பல தீம்களில் இந்தியாவின் பல நாடுகளில் அவர் கண்காட்சிகளை நடத்தி பாராட்டுகளை குவித்து வருகிறார்.

ஆனால் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டவர் இவர். இந்த நிலையில் மாலியின் புகைப்படங்களுடன் புனே நகரில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் மூன்று நாள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் சனிக்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள கலைக் கூடம் உள்ள பாலகந்ததர்வ் ரங் மந்திரின் பொறுப்பாளர் சுனில் மேட் என்பவர் கூறுகையில், தீம் குறித்து முன்கூட்டியே மாலி தெரிவிக்கவில்லை எனவும், மற்ற நபர்களை உணர்வுகளை புண்படுத்தும் எந்த ஒரு கண்காட்சியும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.
மேலும் கண்காட்சியில் நிர்வாண புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது தங்களது கலை கூடத்திற்கு பொருத்தமானது இல்லை எனவும், நிர்வாண புகைப்படங்கள் குறித்த தகவல் அறிந்ததும் புகைப்படங்கள் மற்றும் கண்காட்சியை நிறுத்துமாறு புகைப்பட கலைஞர் அக்சய் மாலியிடம் கூறப்பட்டது என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய புகைப்பட கலைஞர் அக்ஷய் மாலி, இட்ஸ் மீ என்ற கருவுடன் நடைபெற்ற இந்த கண்காட்சி கலைகளில் எல்லைகளை உடைத்து உள்ளதாக கூறினார். கண்காட்சியில் தனது மற்றும் இயற்கையாக கிளிக் செய்யப்பட்ட மற்ற மாடல்களின் நிர்வாண புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன என்றும், கண்காட்சிக்கு வந்த சிலர் இது குறித்து கலைக்கூடத்தின் நிர்வாகிகளுக்கு புகார் அளித்ததால் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் , கண்காட்சியை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கலை கூடத்திற்கு பதிவு செய்யும்போது கண்காட்சியின் தீம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் புகைப்பட கண்காட்சி என்று பொதுவாகக் குறிப்பிட்டு பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications