• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குற்ற உணர்ச்சியே இல்லை.. காதலியை கூறுபோட்ட சைக்கோ அப்தாப் சிறைவாசத்தை எப்படி கழிக்கிறாராம் தெரியுமா?

Google Oneindia Tamil News

மும்பை: டெல்லியையே உலுக்கிய சாரதா கொலை வழக்கு குற்றவாளி அப்தாப் பூனாவாலா திகார் சிறையில் 4 ஆம் எண் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் நாளை அவர் எப்படி கழித்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையை சேர்ந்தவர் சாரதா வாக்கர். இவர் டேட்டிங் ஆப் மூலம் அதே பகுதியை சேர்ந்த அப்தாப் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாரதா- அப்தாபின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சாரதாவை அழைத்துக் கொண்டு அப்தாப் டெல்லியில் வீடு எடுத்து தங்கினார். பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் சாரதா, அப்தாபுடன் சென்றுவிட்டார்.

நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! சாரதா உடல் இருக்கும் போதே நடந்த பரபர சம்பவம்! பகீர்நள்ளிரவில் அப்தாப் வீட்டிற்கு வந்த பெண் டாக்டர்! சாரதா உடல் இருக்கும் போதே நடந்த பரபர சம்பவம்! பகீர்

திருமணம்

திருமணம்

இந்த நிலையில் டெல்லியில் தனி வீட்டில் திருமணமே செய்து கொள்ளாமல் இருவரும் கணவன் - மனைவி போல் வாழ்ந்துள்ளனர். ஒரு நாள் சாரதா அப்தாபிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். ஆனால் அப்தாப் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தவிர்த்துள்ளார். இது போல் ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும் போதெல்லாம் அப்தாப் , சாரதாவை அடிப்பதும் கொடுமைப்படுத்துவதுமாக இருந்ததாக தெரிகிறது.

 நியாயமான கோரிக்கை

நியாயமான கோரிக்கை

ஒரு கட்டத்தில் திருமணம் என்ற சாரதாவின் நியாயமான கோரிக்கையை கூட நச்சரிப்பாக நினைத்த அப்தாப் கருதியிருந்தார். இதனால் கடும் கோபத்துடன் சாரதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் சாரதா பலியாகிவிட்டார். உடனே உடலையும் கொலையையும் மறைக்க அப்தாப் 35 துண்டுகளாக சாரதாவின் உடலை கூறு போட்டுள்ளார். அந்த துண்டுகளை பிரிட்ஜில் வைத்து தினமும் சில துண்டுகளை கவரில் போட்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போட்டுள்ளார்.

 சாரதாவிடம் இருந்து மெசேஜ்

சாரதாவிடம் இருந்து மெசேஜ்

ஒரு கட்டத்தில் சாரதாவிடம் இருந்து எந்த மெசேஜும் வராததால் அலர்ட் ஆன நண்பர்கள், சாரதாவின் பெற்றோர் மூலம் புகார் கொடுத்தனர். இதில் அப்தாப்பின் கொடூர முகம் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து சாரதாவை எப்படி கொன்றார் என கேட்டு நடித்து காட்ட சொன்னார்கள். மேலும் சாரதாவின் தலை பாகம் எங்கே என கேட்டுள்ளனர். இந்த நிலையில் அப்தாப் வீட்டிலிருந்து கத்தி, கையுறை, பிளாஸ்டிக் கவர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 உடலை கூறு போட பயன்படுத்தப்பட்ட ரம்பம்

உடலை கூறு போட பயன்படுத்தப்பட்ட ரம்பம்

ஆனால் சாரதாவின் உடலை கூறு போட பயன்படுத்தப்பட்ட ரம்பத்தை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் சாரதாவை கொன்றபிறகு, தனக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட கிடைக்கக் கூடாது என்பதில் அப்தாப் கவனமாக செயல்பட்டதாக போலீஸார் கூறுகிறார்கள். அப்தாபை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் அந்த காவல் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் புதுடெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அப்தாபை 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

 சிறை எண்

சிறை எண்

இதையடுத்து அப்தாப்பை திகார் சிறைக்கு போலீஸார் கொண்டு வந்தனர். அங்கு சிறை எண் 4 இல் அவரை அடைத்துள்ளனர். முதல் முறையாக குற்றம் செய்யும் நபர்களை சிறை எண் 4 இல் தான் அடைப்பார்களாம். அப்தாபை சிறையில் அடைத்துள்ள நிலையில் அவரது அறையை சுற்றிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனராம்.

 தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

24 மணி நேரமும் போலீஸார் ஷிப்ட் போட்டு கண்காணித்து வருகிறார்கள். அப்தாபால் தற்போதைக்கு வெளியே வர முடியாது. அவருக்கான உணவை போலீஸாரே அவருடைய செல்லிற்கு கொண்டு வந்து தருகிறார்கள். நேற்றுமுன் தினம் இரவு உணவை சாப்பிட்ட அப்தாப், சிறையில் நன்றாக தூங்கினாராம். தன்னுடன் மனைவியாக வாழ்ந்த காதலியை கொன்றுவிட்டோமே என்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாமல் அவருக்கு நல்ல தூக்கம் வந்ததாம். அவரை இன்றைய தினம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைத்து செல்வதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 இன்று நார்கோடிக் டெஸ்ட்?

இன்று நார்கோடிக் டெஸ்ட்?

நார்கோடிக் சோதனையில் சாரதாவை கொன்றது ஏன், இத்தனை கோபம் வரும் அளவுக்கு என்ன நடந்தது, ஏற்கெனவே ஏதாவது கொலை செய்துள்ளாரா, அப்தாப் எந்த மாதிரியான குணம் கொண்டவர், அவர் மனதில் இருப்பது என்ன உள்ளிட்டவை குறித்து தெரியவரும். இந்த சோதனையின் முடிவை வைத்து அவருக்கான தண்டனையும் வழக்கு விசாரணையும் நகரும் என தெரிகிறது. அப்தாப் வெளியே வராதபடி கடும் தண்டனை விதிக்க வேண்டும் என சாரதாவின் நண்பர்களும், பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Shraddha Walker murder case: Aftab was lodged in Tihar jail number 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X