பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
மும்பை: பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நல குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுச் செய்தியை மருத்துவமனை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

பாப்பி டா என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், தங்கத்தின் மீதான ஈர்ப்பினால் அதிக தங்க நகைகளை அணிவார். டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற திரைப்படங்களுக்கு பப்பி லஹரி இசையமைத்துள்ளார். தமிழில் பாடும் வானம் பாடி படத்தின் மூலம் பிரபலமானார்.

கடந்த ஆண்டு, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பப்பி லஹரி. கொரோனாவில் இருந்து மீண்டாலும் நோய்களால் பாதிக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. நள்ளிரவுக்கு சற்று முன்பு மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications