பர்தா அணிய மறுப்பு.. இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்றாததால் மனைவி கொலை.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மும்பை: இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்ற மறுத்ததால் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர் இக்பால் ஷேக் (வயது 36). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ருபாலி என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சாரா என்று ருபாலி மாற்றிக் கொண்டார். இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உண்டு.

இஸ்லாமிய மத சடங்குகளை..
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் இல்வாழ்க்கையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்துள்ளது. தனது மனைவி இஸ்லாமிய மதச்சடங்குகளை உரிய முறையில் பின்பற்றவில்லை என்ற கோபத்தில் இக்பால் ஷேக் இருந்து வந்தாராம். இது தொடர்பாக மனைவியிடம் வலியுறுத்தியும் வந்ததாக சொல்லப்படுகிறது.

பர்தா அணிய மறுப்பு
ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் சாரா. மேலும் பர்தா அணிய முடியாது எனவும் கூறியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி தனது மனைவியை தொடர்பு கொண்ட இக்பால், இனி நாம் சேர்ந்து வாழ்வது கடினம். எனவே விவாகரத்து செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

கடும் வாக்குவாதம்
மேலும் இது தொடர்பாக நேரில் பேச வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இக்பால் அழைப்பை ஏற்று இரவு 10 மணியளவில் சாரா அங்கு சென்று இருக்கிறார். இருவரும் சந்தித்து பேசிய போது, மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று இருவரும் விடாப்படியாய் இருந்துள்ளனர். இருவரும் மாறி மாறி பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

கத்தியால் குத்தி கொலை
அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற இக்பால், தனது மனைவி என்றும் பாராமல் அவரை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். பல முறை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மனைவி சாரா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இக்பால் மீது கொலை வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய மத சடங்குகளை பின்பற்ற மறுத்ததால் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications