அரசு ஏசி பஸ்சில் உல்லாசம்! இளம் ஜோடி அத்துமீறல்.. ஊர் முழுக்க பரவிய வீடியோ! நடத்துனருக்கு சிக்கல்?
மும்பை: அரசு ஏசி பஸ்சில் பயணம் செய்த இளம் காதல் ஜோடிகள், அந்த பேருந்தின் இருக்கை சீட்களை படுக்கை அறை என நினைத்து உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பலரும் பயணம் செய்யும் அரசு பஸ்சில் இளம் காதல் ஜோடி செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவியது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் அரசு ஏசி பேருந்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால், தங்களை மறந்து பேருந்து என்று கூட பார்க்காமல் இளம் காதல் ஜோடியினர் அத்துமீறியுள்ளனர். இதை பக்கவாட்டில் வந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அரசு பஸ்சில் இளம் ஜோடி உல்லாசம்
பொது இடங்களில் சில இளம் காதல் ஜோடிகள், சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் அதிகம் செல்லும் பார்குகள், பீச்கள் போன்ற இடங்களில் கூட இப்படி இளம் ஜோடிகள் தங்களை மறந்து செய்யும் காரியங்கள் காண்போரை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
பைக்கில் செல்லும் போது சாலைகளில் சல்லாபத்தில் ஈடுபடுவது என மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடைபெறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய ஒரு நிகழ்வுதான் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. ஓடும் அரசு ஏசி பஸ்சில் இளம் காதல் ஜோடிகள் உல்லாசம் அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
பேருந்து சீட்டை படுக்கையாக மாற்றி
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை அடுத்து நவி மும்பை உள்ளது. இங்கு மாநகாரட்சி சார்பில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பன்வெலில் இருந்து கல்யாண் நகர் நோக்கி மாநகராட்சி ஏசி பேருந்து ஒன்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் குறைந்த பயணிகளே இருந்துள்ளனர். சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்ஜோடி ஒன்றும் பயணித்துள்ளது.
பேருந்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் அதை தங்களுக்கு சாதகமாக்கிய இளம் ஜோடி, அத்து மீற தொடங்கியது. ஒரு கட்டத்தில் சில்மிஷங்கள் எல்லை மீற தொடங்கின. பேருந்து என்று கூட பாராமல் பேருந்து சீட்டை படுக்கையாக மாற்றி உல்லாசம் அனுபவிக்க தொடங்கினர். பேருந்து நடத்துநரும் இதை கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மற்றொரு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், இளம்ஜோடியின் மன்மத லீலைகளை பார்த்துவிட்டார்.
பஸ் கண்டக்டரிம் விசாரணை
உடனடியாக அவர் தனது செல்போனில் இந்தக் காட்சிகளை படம் பிடித்தார். அதோடு, இந்த வீடியோவை அப்படியே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. இந்த வீடியோ மாநகராட்சி அதிகாரிகள் கண்ணிலும் பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் சம்பந்தபட்ட பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்தனர்.
டிரைவரிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்து காதல் ஜோடியின் அத்துமீறலை தடுக்க தவறியதற்காக நடத்துனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், துறை ரீதியான விசாரணைக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஷிண்டே இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இன்றைய தலைமுறை இளைஞர்கள் பொது இடங்களில் தங்கள் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பொது இடங்களில் இது போன்ற மோசமான செயல்கள் சட்டவிரோதமானது. இதனை ஏற்று கொள்ள முடியாது" என்றார். பொது இடங்களில் இதுபோன்று அத்துமீறும் இளம் ஜோடிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications