இவ்வளவு கஷ்டமா! காலை பார்த்தால் அதிர்ச்சி! ராகுல் யாத்திரையில் கலக்கம்! இணையத்தை உலுக்கிய ஒரு போட்டோ
மைசூர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வரும் நிலையில், இந்த யாத்திரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது. அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார்.
தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர்.
3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது

ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் இந்த பயணம் 600 கிமீ தூரத்தை தற்போது கடந்து உள்ளது. இந்த பயணம் காரணமாக அவர் மற்றும் அவருடன் செல்லும் நிர்வாகிகள் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றனர். அந்த கஷ்டத்தை மீறிதான் இவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் 20-30 கிமீ தூரம் செல்வதால் இவர்கள் கடுமையாக இன்னல்களை சந்திக்கிறார்கள். வேறு வேறு வானிலை, காலநிலை, தண்ணீர், உணவு என்று கடுமையாக கஷ்டப்படுகிறார்கள். மழை நீரில் நடப்பது, வெயிலில் நடப்பது போன்ற கஷ்டங்களையும் இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

பேரணி
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி நேற்று மைசூரில் மழையில் நின்று பேசினார். கனமழையில் நின்று மக்கள் முன்னிலையில் பேசினார். ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வெறுப்பை பரப்புகிறது. மக்கள் இடையே வெறுப்பை திணிக்கிறது. இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. காஷ்மீரை அடையும் வரை இந்த பேரணி முடிவிற்கு வராது. அதுவரை தொடரும். நீங்கள் இப்போது நாங்கள் மழையில் நனைவதை பார்க்கலாம்.

மழையில் பேரணி
ஆனால் மழை எங்களின் பயணத்தை நிறுத்தவில்லை. மழை எங்களை தடுக்கவில்லை. இப்படி எந்த பயணமும் எங்களை தடுக்காது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். இந்த யாத்திரை முழுக்கவே மக்களை கவரும் வகையில் பல்வேறு போட்டோக்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கஷ்டப்பட்டு மேற்கொள்ளும் பேரணி போட்டோக்கள் பல வெளியாகி வருகின்றன. தொடக்கத்தில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், ஜோதிமணி ஆகியோர் தரையில் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

வயதானவர்கள்
அதன்பின் ராகுல் காந்தி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் தற்போது இரண்டு வயதான பெண்கள் பேரணியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மைசூரில் இவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தங்களின் பேரன், பேத்திகளை தூக்கிக்கொண்டு இவர்கள் பேரணியில் ஈடுபட்டு உள்ளனர். வயதான காலத்திலும் இவர்கள் பேரணியில் கலந்து கொண்டு உள்ளது காங்கிரஸ் கட்சியினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவரணி
இந்த நிலையில்தான் தேசிய காங்கிரஸ் மாணவரணி செயலாளர் ரோஷன் லால் பிட்டு தான் பேரணி செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது காலில் ஏற்பட்டு இருக்கும் கொப்பளங்களை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். 600 கிமீக்கு மேலாக நடந்த நிலையில் இவருக்கு காலில் கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து.. இந்த பேரணி மிகவும் கடினமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications