தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத்.. சிக்கிய ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை மாவட்ட தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பூபாலன் மற்றும் அவரின் நண்பர் சுகன் ஆகியோர் வீட்டில் நடந்த 8 மணி நேர சோதனைக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பூபாலன் தவெகவில் இருந்து நீக்கப்படுவதாக அவசர அவசரமாக அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலனுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகி பூபாலனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

Nagapattinam

மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு பூபாலன் வீட்டில் சோதனை மேற்கொண்டது. இந்த புகாரில் தொடர்புடைய பூபாலனின் நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை, சுமார் 8 மணி நேரம் வரை நீடித்துள்ளது.

இறுதியாக 135 கிலோ மெத்தம்பெட்டமைன் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை பூபாலன் பதுக்கி வைத்திருந்த சூழலில், அதனை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதேபோல் பூபாலன் மற்றும் சுகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவெக நிர்வாகியிடம் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளி வந்த பின், உடனடியாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன், பூபாலனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தவெகவின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் முரணாக செயல்பட்டதால், பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் இனி வரும் காலங்களில் கட்சி ரீதியிலான தொடர்பை தவெகவினர் வைத்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+